பிப்ரவரி 08, கிருஷ்ணகிரி (Krishnagiri): கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தாலுகா, மாடக்கல் அருகிலுள்ள வனப்பகுதியில் இன்று மதியம் லேசான நில அதிர்வு (Earthquake) ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவாகியுள்ளதாகவும், 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் எந்த ஒரு உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்படவில்லை. அதேநேரம் வனப்பகுதி என்பதால் நில அதிர்வை யாரும் உணர முடியவில்லை. X Platform 2.0 Limited Edition: மணிக்கு 72கிமீ வேகத்தில் பயணிக்கும் இஸ்கூட்டர்.. எக்ஸ் பிளாட்ஃபார்ம் 2.0 லிமிடெட்ட எடிசன் வெளியீடு..!
மேலும் தகவலறிந்து அப்பகுதியில் அதிகாரிகள் சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி இது குறித்து பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்று மாவட்ட ஆட்சியர் சரயு கூறியுள்ளார். இருப்பினும் கிருஷ்ணகிரியில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.