Corona Virus: ஒரே வாரத்தில் திடீர் உச்சம்பெற்ற கொரோனா... 7 நாட்களுக்குள் 1000 பேர் மரணம்; அதிரவைக்கும் ரிப்போர்ட்.!
சர்வதேச அளவில் பெரிய அச்சுறுத்தலை தரும் கொரோனா, உலகில் குறைந்தளவு இருந்தாலும், அதன் தாக்கம் நீடிக்கும் என்ற உலக சுகாதார அமைப்பின் கூற்று உறுதியாகி இருக்கிறது.
செப்டம்பர் 02, நியூயார்க் (World News): உலகளவில் கடந்த 2021ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், 195 நாடுகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. பொருளாதார பிரச்சனையையும் உண்டாக்கியது. முதலில் பரவிய கொரோனா, ஒவ்வொரு நாடுகளுக்கும் ஏற்ப தனது தகவமைப்பை மாற்றி உருமாறியும் பரவி இருந்தது. சர்வதேச அளவில் கொரோனா 704,753,890 பேரிடம் பரவி இருந்தது, இதில் 7,010,681 பேர் உயிரிழந்து இருந்தனர். அமெரிக்காவில் மட்டும் 1,219,487 பேர் உயிரிழந்தனர். Bomb Threat to Indigo Flight: நடுவானில் பறந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; அவசரமாக தரையிறக்கம்..!
ஒரே வாரத்தில் 1000+ பேர் பலி:
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு பின்னர் குறைந்தாலும், ஆங்காங்கே சிறிய அளவில் தென்பட்டு வந்தது. அவ்வப்போது அதிபர் ஜோ பைடனும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 26ல் இருந்து செப்டம்பர் மாதம் 1ம் தேதி வரை 177,573 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருந்த நிலையில், 1262 பேர் மரணம் அடைந்தது தெரியவந்துள்ளளது.
கிட்டத்தட்ட ஒரு வாரத்தில் 1262 பேர் மரணம் அடைந்துள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள 22 மாகாணங்களில் கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த மார்ச் மாதத்திற்கு பின் கொரோனா வைரஸால் 1000 பேர் ஒரு வாரத்திற்குள் உயிரிழந்து இருப்பதாகவும் பிஎன்ஓ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.