Israel Palestine War: இஸ்ரேல் போர் விவகாரத்தில், அதிபர் பெஞ்சமினுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க துணை அதிபர்.. காரணம் என்ன?.!

கிட்டத்தட்ட ஓராண்டுகளை நெருங்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் கமலா ஹாரிஸ் இஸ்ரேல் அரசை கேட்டுக்கொண்டு, அதிபர் பெஞ்சமினுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

Israel Palestine War: இஸ்ரேல் போர் விவகாரத்தில், அதிபர் பெஞ்சமினுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்க துணை அதிபர்.. காரணம் என்ன?.!
Benjamin Netanyahu | Kamala Harris (Photo Credit: @ANIDigital X)

ஜூலை 26, வாஷிங்க்டன் டிசி (World News): மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேல் - பாலஸ்தீனியம் (Israel Palestine War) இடையே நடக்கும் போர் ஓராண்டுகளை நெருங்குகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7, 2023 அன்று தொடங்கியபோரின் துவக்கத்தில் பாலஸ்தீனியத்தை சேர்ந்த ஹமாஸ் படையினர், இஸ்ரேல் நாட்டை எதிர்த்து வான்வழி ஏவுகணை உட்பட பல்முனை தாக்குதலை முன்னெடுத்தனர். இஸ்ரேல் நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, கண்ணில் படுவோரை கொடூரமாக தலைதுண்டித்து கொலை செய்தனர். இதனால் இஸ்ரேல் தரப்பில் 1400 பேர் உயிரிழந்தனர், 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். பலர் பிணையக்கைதிகளாக பிடித்து அழைத்து செல்லப்பட்டனர். இவர்களை பேச்சுவார்த்தையின் மூலமாக அழைத்து வருகின்றனர்.

40 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை:

போரை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல், திடீர் தாக்குதலுக்கு பின்னர் போரில் களமிறங்கினாலும் வரலாற்றில் பாலஸ்தீனியம் எழுந்து வர இயலாத அளவு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வான்வழி தாக்குதல் வாயிலாக பாலஸ்தீனியத்தில் இருக்கும் பல நகரங்கள் தாக்கப்பட்டு கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது ஐ.நா முகாம்களிலும், பள்ளிகளிலும், மருத்துவமனையிலும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது வரை பாலஸ்தீனியத்தின் தரப்பில் 39,670 பேர் உயிரிழந்துள்ளனர். Kargil Vijay Diwas 2024: கார்கில் விஜய் திவாஸ் 25ம் ஆண்டு நினைவுதினம்; பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று மரியாதை.! 

போரை நிறுத்த வலியுறுத்தல்:

போரின் தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்த பல உலக நாடுகள், இஸ்ரேல் பாலஸ்தீனியத்தின் மீது நடத்திய கொடூர தாக்குதலுக்கு பின் அந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருகிறது. தாக்குதலை முன்னெடுத்த பாலஸ்தீனியத்தின் ஆதரவு ஹமாஸ் படைக்கு மத்திய கிழக்கில் உள்ள எமன், ஈராக் உட்பட பல நாடுகள் ஆதரவாக இருக்கின்றன. இதனால் ஏமன் வளைகுடா பகுதியில் வரும் இஸ்ரேலுக்கு ஆதரவான வணிக கப்பல்கள் மீது தொடர் தாக்குதலும் ஏமன் சார்பில் முன்னெடுக்கப்படுகிறது. போரின் தொடக்கத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கிய அமெரிக்கா, தற்போது இஸ்ரேலின் நிலை மாறி வருவதை கண்டு போரை நிறுத்தக்கூறி கண்டனமும் தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் விறுவிறுப்பு பெற்றுள்ள அதிபர் தேர்தல்:

இந்நிலையில், இஸ்ரேலிய அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு அரசுமுறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் தற்போது அதிபர் (US President Election 2024) தேர்தல் பிரச்சார பணிகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், ஜனநாயக கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் (Kamala Harris) போட்டியிடுகிறார். தற்போது துணை அதிபராக பணியாற்றி வரும் கமலா ஹாரிஸ், அதிபர் தேர்தலில் வெற்றி அடைந்தால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு அவர் அமெரிக்க அதிபராக பணியாற்றுவார். இதனால் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸுக்கு அமெரிக்காவில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது, உலகளாவிய தலைவர்களும் அவரை முன்னிறுத்த தொடங்கியுள்ளனர். Joker Folie a Deux Trailer Out: ஜோக்கர் என்ற ராட்சசனுக்குள் மலர்ந்த காதல்.. ஜோக்கர் படத்தின் ட்ரைலர் வெளியீடு..! 

துணை அதிபர் கமலா, பெஞ்சமினுக்கு எச்சரிக்கை:

இதனிடையே, அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸை, பெஞ்சமின் (Benjamin Netanyahu) நேரில் சந்தித்தார். அச்சமயம் இஸ்ரேல் போர் தொடர்பாக பேசிய கமலா ஹாரிஸ், "பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்த ஒப்பந்தத்தை பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காசாவில் (Gaza Strip) இனி வரும் நாட்களில் நடைபெறும் அதிக துன்பங்களை கண்டு அமைதியாக இருக்கமாட்டேன். இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு வழங்கினாலும், காசாவில் நடக்கும் மனிதஉரிமை மீறல்களை கைவிடவேண்டும். இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக்கொள்ளும் உரிமை உண்டு எனினும், காசாவில் நடந்துள்ளளது பேரழிவு. பிணையக்கைதிகளை மீட்டுகொண்டுவர பைடன் நிர்வாகம் உறுதியாக இருக்கிறது. பொதுமக்களின் துயரத்தை கண்டு பொறுத்துக்கொள்ள இயலாது. இஸ்லாமோபோபியா, யூத எதிர்ப்பு என எந்த வெறுப்பையும் எதிர்ப்போம், மக்களை ஒன்றிணைப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement