ஜூலை 26, லடாக் (Ladakh News): இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த 1999ம் ஆண்டு லடாக் பகுதியில் மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை போர் நடைபெற்றது. இந்த போரின் முடிவில் இந்திய வெற்றிபெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும்பொருட்டும், மறைந்த வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தும் பொருட்டும், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 26ம் தேஹத்தி கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் இந்திய குடியரசுத்தலைவர், பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர் உட்பட பலரும் கார்கிலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்துவார்கள். அந்தவகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று லடாக்கில் உள்ள கார்கிலுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். கார்கில் வெற்றி தினம் மற்றும் மறைந்த வீரர்களின் 25ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் லடாக் சென்றுள்ளார். Paris Olympics 2024: கோலாகலமாக தொடங்கியது பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024; விறுவிறுப்பாக நடைபெறும் ஆட்டங்கள்.!
#WATCH | Ladakh: Prime Minister Narendra Modi at the Kargil War Memorial in Kargil
He paid tribute to the heroes of the Kargil War on the occasion of 25th #KargilVijayDiwas2024 pic.twitter.com/dHLZmDMdi0
— ANI (@ANI) July 26, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)