Disease X: கொரோனவை போல அடுத்த புதிய வைரஸ்?; மே மாதத்தில் பரவும்.. உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி எச்சரிக்கை..!
சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ள பல்வேறு நோய்களை முன்னதாகவே கண்டறிந்து கூறும் உலக சுகாதார அமைப்பு, மீண்டும் தனது எச்சரிக்கையை விடுத்தது இருக்கிறது.
ஜனவரி 22, ஸ்விட்சர்லாந்து (World News): உலக சுகாதார அமைப்பின் பொதுச் செயலாளர் தலைமையில் சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய உலக சுகாதார அமைப்பின் பொதுச்செயலாளர் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom), கொரோனாவை போல இந்த ஆண்டு மே மாதத்திற்குள் பரவுள்ள டிசிஸ் எக்ஸ் (Disease X) தொற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக வேண்டும். இந்த நோய் தொற்றை எதிர்த்து போராட வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது.
கொரோனா போல அடுத்த நோய்: கொரோனா காலத்தில் நாம் சந்தித்த அனுபவங்கள், சவால்கள் மற்றும் அது சார்ந்த தீர்வுகளை நாம் மீண்டும் உபயோகப்படுத்தும் நிலைமை ஏற்படலாம். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அறியப்படாத நோயை குறிக்கும் வார்த்தையாக எக்ஸ் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், எதிர்பாராத நிகழ்வுகளின் தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக டிசீஸ் எக்ஸ் நம்மை ஆட்கொண்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், அதனை எதிர்க்க நாம் எந்நேரமும் உஷார் நிலையில் இருக்க வேண்டும்.
உலக நாடுகள் தயாராக வேண்டும்: அது சார்ந்த ஆராய்ச்சிகள், சுகாதார ரீதியாக உட்கட்டமைப்பு மேம்படுத்துதல், பணியாளர்களை தயார் நிலையில் வைத்திருத்தல் போன்றவற்றையும் நாம் உறுதி செய்ய வேண்டும். தொற்றுநோயை திறம்பட நிர்வகித்து எதிர்கால சவால்களை எதிர்கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும். உலக அளவில் எதிர்கால தலைமுறைக்கு புதிய நோயை பரவிடாமல் நாம் இயன்ற அளவு தடுக்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.