World Leprosy Day: உலக தொழுநோய் தினம்.. அதன் அறிகுறிகள் என்ன?. அதன் முழுவிபரம் இதோ..!
தொழுநோயாளிகளுக்கு சரியான சிகிச்சையும், ஆதரவும் இருந்தால் அவர்களும் இப்பூவுலகில் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும்..

ஜனவரி 30, உலகம் (World News): தொழு நோய் என்ற வார்த்தையை கேட்டாலே துர்நாற்றம் வீசுவதைப் போல பலர் அஞ்சுகின்றனர். இந்த தொழு நோயானது பல ஆண்டுகளாக இந்த உலகம் முழுவதுமே இருந்து வருகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் ஜனவரியின் கடைசி ஞாயிறு தொழு நோய் ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகின்றது.
அன்னை தெரசா: தொழு நோய் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது என்றால் கண்டிப்பாக அது அன்னை தெரசா தான். அன்னை தெரசா இந்தியாவில் தொழுநோய் பாதிக்கப்பட்டவர்கள் படும் துயரங்களைக் கண்டு, இந்தியாவில் தங்கி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தன் வாழ்க்கையே அர்ப்பணித்து தொண்டாற்றினார். மேலும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். அதே சமயம் தமிழில் எம் ஆர் ராதாவின், "குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி என்பது எது" என்ற பாடல் தொழு நோய்க்கான விழிப்புணர்வு குறித்து வெளியானது. Tyagaraja Aradhana Music Festival: ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை இசை விழா... இன்றுடன் நிறைவு..!
தொழு நோய்க்கான காரணம்: தொழு நோய் என்பது மைக்ரோ பாக்டீரியம் லெப்ட்ரே என்ற பாக்டீரியாவால் உண்டானது. இதனை 1873 ஆம் ஆண்டு டாக்டர் ஹெரார்ட் ஹேன்சன் என்பவர் கண்டறிந்தார். தொடர்ந்து அவரின் பெயராலேயே இந்த நோய் அழைக்கப்பட்டது. பின்னர் காலப்போக்கில் குஷ்டம், மேக நீர், மேகநோய் என்று பல பெயரில் இதனை அழைத்தனர். மேலும் இந்தத் தொற்று உடலில் பட்ட ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரே அறிகுறிகள் தென்படும் என்று கூறுகின்றனர்.
அறிகுறிகள்: இந்த நோய்க்கான அறிகுறிகள் ஒரு வருடத்திற்கு பின்பு முதல் 20 வருடத்திற்கு பின்பு கூட தென்படலாம். தோலில் ஏற்படும் கட்டிகள் அல்லது புடைப்புகள் சில வாரங்களுக்கு பின்பும் நீங்காமல் இருப்பது, தோலில் லேசான திட்டுகள் போன்று ஏற்படுவது, காதில் மருக்கள் அல்லது முகத்தில் கட்டிகள் அல்லது வீக்கம் ஏற்படுதல், இமை பலவீனம் மற்றும் கண்ணின் ஒளி குறைவு பார்வை இழப்பு, உள்ளங்கை மற்றும் பாதங்களில் உணர்வு அற்று போகுதல் இவை அனைத்தும் தொழு நோயின் அறிகுறிகள் ஆகும். இந்த நோய் ஒருவர் மற்றொருவரை தொடுவதன் மூலம் பரவாது. இது காற்றின் மூலம் பரவக்கூடியது. ஒருவரின் இருமல் மற்றும் தும்மல் மூலம் பரவக்கூடியது. Google Map Gone Wrong: வேலையை காண்பித்த கூகுள்; மேப்பை நம்பி படிக்கட்டு வழியே பயணம்..! ஊட்டியில் ஷாக் சம்பவம்.!
சிகிச்சை முறைகள்: தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை அரசு தீவிரமாக மேற்கொள்ள வேண்டும், மேலும் இந்த வகையால் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வேண்டும். மேலும் இதனால் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இல்லையெனில் இதனால் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு முகம் பாதிப்புக்கு உள்ளாவதுடன் தோல் மற்றும் நரம்புகளும் பாதிக்கப்படுவதால் அகோரமான தோற்றம் ஏற்படுகிறது. மேலும் சிகிச்சை எடுத்துக் கொள்ளாத வரை கைகளும் கண்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே இதனைக் கண்டறிந்த உடன் அவர்கள் உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் இந்நோயை குணப்படுத்த முடியும். அதுமட்டுமின்றி ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்தால் கை மற்றும் கால்கள் ஊனம் அடைவதில் இருந்தும் தப்பிக்கலாம்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)