Best Scooty in India: டிவிஎஸ் முதல் ஹூரோ வரை.. எது சிறந்தது? ஸ்கூட்டர் வாங்க திட்டமா?... அசத்தல் டிப்ஸ் இதோ..!
இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த ஸ்கூட்டர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
செப்டம்பர் 20, புதுடெல்லி (New Delhi): நகர்ப்புறங்களில் எளிதான பயணத்துக்கு சிறந்தவை ஸ்கூட்டர்கள் தான். கியர் மாற்றும் சிரமம் கிடையாது, எளிதாக கையாளலாம், போக்குவரத்து நெரிசல்களில் அசராமல் புகுந்து செல்ல எளிதானது, குறிப்பாக நடுத்தர வயதினர் மற்றும் பெண்கள் பயன்படுத்த எளிதானவை என ஸ்கூட்டர்களில் பல சாதகங்கள் உள்ளன. அந்த வகையில் நல்ல செயல்திறனும், குறைவான எடையும் கொண்ட ஸ்கூட்டர்களை உங்களுக்காக பட்டியலிடுகிறோம். இவற்றில் சில மாடல்கள் ஏற்கெனவே சந்தையில் அறிமுகமானவை என்றாலும், அவற்றின் லேட்டஸ்ட் வேரியன்ட் அடிப்படையில் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
TVS ஸ்கூட்டி பெப் பிளஸ்:
இந்தியப் பெண்களின் லைஃப்ஸ்டைலில் பெரும் மாறுதலை ஏற்படுத்திய இருசக்கர வாகனம் டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டி பெப். பைக்குகளுக்கு இணையான வேகத்தில், அதேநேரத்தில் குறைந்த எடையும் எளிதாக இயக்கும் வகையில் இருந்ததால் ஸ்கூட்டி வாகனம் பெண்களின் போக்குவரத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன் நவீன மாடல் தான் பெப் பிளஸ். பிஎஸ்6 வெர்ஷனில் 87.8 சிசி இன்ஜின், USB சார்ஜிங் போர்ட், 5.4 PS இன்ஜின் பவர், ஸ்பார்க் இக்னிஷன், 50 கிமீ மைலேஜ், 96 கிலோ எடை ஆகியவை இதன் முக்கிய அம்சங்கள்.ப்ரின்சஸ் பிங்க், நிரா புளூ உள்ளிட்ட ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது.
விலை (Ex-Showroom): ₹63,284 (சென்னை) Car Maintenance Tips: புதுக் கார் வாங்கி இருக்கீங்களா? முறையாக பராமரிப்பதற்கான சில முக்கிய டிப்ஸ்.!
யமஹா Fascino 125:
கையாள எளிதாகவும், நல்ல செயல்திறனும் கொண்டது யமஹா Fascino 125 ஸ்கூட்டர். தற்போது BS6 அம்சத்துடன் மேம்படுத்தப்பட்ட ரெட்ரோ ஸ்டைல் டிசைனில் வெளியாகியுள்ளது. 125 சிசி இன்ஜின், 8.2 PS பவர், தனித்துவமான ரெட்ரோ-பாணி வடிவமைப்புடன் வந்துள்ளது. இது 11 வண்ணங்களில் வருகிறது. 99 கிலோ எடை, உறுதியான ஃப்ரேம், பக்கவாட்டு கட்-ஆஃப் சுவிட்ச், அண்டர்சீட் USB சார்ஜர், ப்ளூடூத் இணைப்பு டிஜிட்டல் கன்சோல், 5.2 லி டேங்க், 68.75 கிமீ மைலேஜ் உள்ளிட்டவை இதன் முக்கிய அம்சங்கள்.
விலை (Ex-Showroom): ₹77,100 முதல் ₹88,730 வரை
ஹீரோ Pleasure +:
ஹீரோவின் நிறுவனத்தின் மற்றுமொரு செயல்திறன் கொண்ட ஸ்கூட்டர் மாடலாக ஹீரோ Pleasure + வெளிவந்துள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட ப்ளஷர் ப்ளஸ் 110சிசி 4-ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் OHC இன்ஜின், 8.11 PS திறன், அதிக ஸ்டோரேஜ் ஸ்பேஸுடன் டூயல் டெக்ஸ்சர்ட் சீட், USB சார்ஜிங் போர்ட், 101 கிலோ எடை உள்ளிட்டவை இதன் முக்கிய அம்சங்கள். இது 7 வண்ணங்களில் கிடைக்கிறது. 50 கிலோ மீட்டர் மைலேஜ் கொடுக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விலை (Ex-Showroom): ₹68,368 முதல் ₹77,268 வரை
டிவிஎஸ் Zest 110:
ஸ்கூட்டி பெப் போல கையாள எளிதான, அதிக செயல்திறன் கொண்ட டிவிஎஸ் நிறுவனத்தின் மற்றொரு மாடல் டிவிஎஸ் Zest 110 ஆகும். இது 2 மாறுபட்ட வேரியன்ட் மற்றும் 5 வண்ணங்களில் கிடைக்கிறது. பிஎஸ்6 தர மேம்பாட்டுடன் 109.7 சிசி இன்ஜின், 7.81 PS திறன், 3D லோகோக்கள், பழுப்பு நிற உட்புற பேனல்கள், டூயல்-டோன் இருக்கைகள், LED DRL மற்றும் அண்டர் சீட் ஸ்டோரேஜ் லைட், இரட்டை லக்கேஜ் ஹூக்குகள், 4.9 லி ஃப்யூயல் டேங்க், 103 கிலோ எடை ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். இதன் மைலேஜ் 48 கிமீ.
விலை (Ex-Showroom): ₹71,636 முதல் ₹73,002 வரை. Cars With Sunroof: சன்ரூஃப் கார்களை வாங்க விருப்பமா? கொஞ்சம் இதை தெரிஞ்சிக்கிட்டு போங்க.!
வெஸ்பா அர்பன் கிளப் 125:
மிகச்சிறந்த செயல்திறன், அசத்தலான வடிவமைப்பு, ஃபேஷனான லுக் - இதுதான் வெஸ்பா வெஸ்பா அர்பன் கிளப் 125 மாடல். பிரீமியம் ஸ்கூட்டரான வெஸ்பாவின் குறைந்தவிலை வெர்ஷனாக, பிஎஸ்6 தரத்துடன் அர்பன் கிளப் 125 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 125 சிசி ஏர்-கூல்டு இன்ஜின், 9.65PS திறன், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், சிறந்த சஸ்பென்ஷன் அமைப்பு, 7.4 லி டேங்க் உள்ளிட்டவை இதன் முக்கிய அம்சங்கள். 45 கிமீ மைலேஜ் அளிக்கும் இதன் எடை கொஞ்சம் அதிகம். ஆம், 114 கிலோ எடை கொண்ட ஹெவியான ஸ்கூட்டர் இது. இது நான்கு வண்ணங்களில் வெளிவருகிறது.
விலை (Ex-Showroom): ₹73,733 முதல் ₹1,07,167 வரை, வேரியண்ட் அடிப்படையில் விலை மாறுகிறது.