Skoda Electric SUV (Photo Credit: @searchevindia X)

செப்டம்பர் 19, புதுடெல்லி (New Delhi): முதல் கார் வாங்கிய புதிதில் அனைவரும் காரை குடும்பத்தில் ஒரு ஆள் போலவே கவனமாக பார்த்துக் கொள்வர். ஆனால் இது மூன்று மாதம் கூட நீடிக்காது. அப்படியே அதை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவர். கார் வாங்குவதை விட அதை பாராமரிப்பதே கடினமான ஒன்றாக இருக்கும். அதிலும் முதல் கார் பாரமரிக்க சில அடிப்படை விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியம். உங்களின் முதல் கார் பாராமரிக்க சில யோசனைகளை வழங்குகிறோம்.

வாங்கி 6 மாதம்தான் ஆகியிருக்கு அதனால் எந்த கோளாரும் ஏற்படாது என நினைத்து பல விஷயங்களை நாம் செக் செய்வதே இல்லை. பழுதாகும் போது அதிக விலை கொண்டு மாற்றும் நிலை வரும். இவை தடுக்க அனைத்தையும் சரிபார்ப்பது மிக அவசியம்.

ஏர் ஃபில்டர்:

ஏர் ஃபில்டரில் ஏதாவது அடைப்பு இருந்தால் அது காருக்கு மிகப்பெரிய சிக்கலைக் கொடுத்துவிடும். காரில், காற்று வடிகட்டிகள் எனப்படும் ஏர் ஃபில்டர்களில் ஏதாவது தூசுகள் அடைத்துள்ளதா என சரிபார்ப்பது அவசியமாகும். இதை கண்டுகாமல் விட்டுவிட்டால், காற்றோட்டத்தை குறைத்து வாகனத்தின் வேகம், செயல்திறனை குறைத்துவிடும். மேலும் எரிபொருள் சேமிப்பையும் பாதிக்கும். வெகு தூரம் பயணிக்கும் போது இதை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும். Report Fish Disease App: மீனவர்களின் வாழ்வில் ஒளியேற்ற புதிய திட்டம்: அறிமுகமானது "மீன் நோய் செயலி".. விபரம் உள்ளே.!

ஹெட்லைட்கள்:

மாதத்திற்கு ஒருமுறையாவது காரின் இரண்டு ஹெட்லைட்களும் நன்றாக உள்ளதா, சரியாக வேலை செய்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். ஹெட்லைட்டின் வெளிச்சம், டர்ன் சிக்னல்கள், பார்க்கிங் லைட்டுகள் என அனைத்தையும் மாதம் ஒரு முறையாவது கானிக்க வேண்டும். ஏனெனில் இதன் செயல்திறன் மெதுவாக குறையும். பெரும்பாலும் இதை நோடீஸ் செய்ய தவறிவிடுவோம்.

பேட்டரியைப் பராமரிக்கவும்:

கார்கள் என்றில்லாமல் அனைத்து வகையான எலக்ரிக் பொருட்களிலும் பேட்டரிகளில் கவனம் செலுத்துவது கட்டாயம் தேவை. பேட்டரியின் அளவைத் தாண்டி காரை இயக்க கூடாது. அதன் செயல் திறனை பாதிக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நெடுந்தூரப் பயணங்கள் செய்கையில் அவ்வப்போது கார்களுக்கு ரெஸ்ட் கொடுக்கலாம்.

வார்னிங் லைட் புரிதல்:

தற்போது அனைத்து வகை கார்களும் சென்சார்கள் மற்றும் வார்னிங் லைட் சிஸ்டத்துடன் வடிவமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வார்னிங் லைட் எரிவதும் அதன் பயன்பாடுகள் பற்றியும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். வார்னிங் லைட்டுகள், சிகப்பு நிறத்தில் காட்டி எச்சரித்தால் அந்த பிரச்சனை என்ன என கண்டறிந்து சரிசெய்யவும். பேட்டரி இன்ஜின் என காட்டினால் காரை சர்வீஸ் செண்டரில் கொடுத்து சரிபார்ப்பது நல்லது.

இன்ஜின் வெளிப்புற சுத்தம்:

காருக்கு உட்புறத்தைப் போலவே, இன்ஜினின் வெளிப்புறத்தையும் சுத்தப்படுத்த வேண்டும். அதன் மீது படியும் சிறிய அளவிலான குப்பைகள் இன்ஜின் இயந்திரத்தை சேதப்படுத்த அதிக வாய்ப்புள்ளது. ஒவ்வொரு மாதமும் பிரேக் ஆயில் அளவையும் சோதித்துப் பார்ப்பது நல்லது. Jio Complimentary Unlimited Plans: நேற்று யாருக்கெல்லாம் ஜியோ வொர்க் ஆகல? அடிச்சது ஜாக்பாட்..! இன்டர்நெட் இலவசம்..!

கார் முழுவதும் சுத்தம் செய்ய வேண்டும்:

கார் நிற்கும் இடங்களை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். அதிக தூசிகள் பூச்சிகள் வராத இடமாக நிருத்தி வைக்க வேண்டும். வீட்டின் உட்புறம் நிறுத்தியிருந்தாலும் அவசியம் கார் கவர்களைப் பயன்படுத்த வேண்டும். கார்களை பயன்படுத்தும் முன் ஈரத்துணி வைத்து துடைத்து விடுங்கள். மற்றும் மாதம் இரு முறை வாட்டர் வாஷ் செய்தால், காரைப் புதிதாகவே வைத்திருக்கலாம். காரின் உட்புறத்திலும் குப்பைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிரேக்குகள் காரின் செயல்திறனைக் குறைக்காவிடினும், அதில் சேரும் குப்பைகளை சுத்தம் செய்வது மிக அவசியம். சக்கரங்களையும் தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.