Ducati Streetfighter V4 Lamborghini: டுகாட்டி நிறுவனத்தின் புதிய பைக்... இந்தியாவில் புக்கிங் தொடக்கம்..!
டுகாட்டி நிறுவனத்தின் ஸ்ட்ரீட் ஃபைட்டர் வி4 பைக் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 26, புதுடெல்லி (New Delhi): டுகாட்டி (Ducati) நிறுவனம் அதன் புதிய சிறப்பு பதிப்பு பைக் மாடல் ஆன ஸ்ட்ரீட் ஃபைட்டர் வி4 (Ducati Streetfighter V4) பைக்கை தற்போது காட்சிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த பதிப்பிற்கான புக்கிங்கை டுகாட்டி தற்போது இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது. லம்போர்கினி நிறுவனத்தின் சூப்பர் கார் மாடல்களை தழுவியே இந்த பைக்கை டுகாட்டி தயார் செய்திருக்கின்றது.
சிறப்பம்சங்கள்: இந்த பைக்கிற்கு அறிமுக விலையாக ரூபாய் 72 லட்சம் நிர்ணயிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த பைக்கை லம்போர்கினியின் உலக புகழ்பெற்ற சூப்பர் கார் மாடல்களில் ஒன்றான எஸ்டிஓ-வை தழுவியே உருவாக்கி இருக்கின்றது. அது தான் இந்த பைக் அதிக விலையில் விற்பனைக்கு வருவதற்கான காரணம் ஆகும். அதேவேளையில், வண்ணத்தைப் பொருத்தவரை இந்த பைக்கிற்கு முற்றிலும் மாறுபட்ட மற்றும் தனித்துவமான வண்ண பூச்சு வேலை பார்க்கப்பட்டு இருக்கின்றது. சிட்ரியா கிரீன் (Citrea Green) மற்றும் டேக் ஆரஞ்சு (Dac Orange) ஆகிய நிறங்களினாலயே இந்த பைக் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. Red Sandalwood For Skin: அழகை மெருகேற்றும் சிவப்பு சந்தனம்... நீங்களும் இதை டிரை பண்ணி பாருங்கள்..!
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 208 பிஎச்பி பவரையும், 123 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் பை-டைரக்சனல் குயிக் ஷிஃப்டர் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், பன்முக ரைடிங் மோட்கள், பவர் மோட்கள், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல், வீலி கன்ட்ரோல், ஸ்லைடு கன்ட்ரோல், எஞ்சின் பிரேக் கன்ட்ரோல், ஆட்டோ டையர் காலிபரேஷன் என ஏகப்பட்ட பிரீமியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை இந்த பைக் தாங்கி இருக்கின்றது.