டிசம்பர் 26, சென்னை (Chennai): சந்தனத்தை பொதுவாக அனைத்து அழகு குறிப்புகளிலும் பயன்படுத்தும் ஒரு பொருளாகும். அதிலும் குறிப்பாக சிவப்பு சந்தனம் (Red Sandalwood) ஆயுர்வேதங்களில் அதிகம் பயன்படுகிறது. இது உடலில் ஏற்படும் காயம், வீக்கம், ரத்தக்கட்டு, போன்றவையைக் குணப்படுத்துகிறது. அழகு குறிப்பில் இந்த சிவப்பு சந்தனம் மேலும் பயனளிக்கும் ஒன்றாகவும் உள்ளது. இது சருமத்திலுள்ள இறந்த செல்களை வெளியேற்றி சருமத்திற்கு சேதமடையாமலும், மிருதுவாகவும் வைக்கிறது. முகத்தில் உள்ள சொரசொரப்புத் தன்மையையும், தடிப்புகளையும் சரி செய்கிறது. சந்தனம் சருமத்தை இளமையாகவும், வறட்சி இன்றி வைத்துக் கொள்ளவும் பெரும் பங்கு வகிக்கிறது.
அனைத்துக்கும் சந்தனமே: வறட்சியான சருமமுடையவர்கள், சிவப்பு சந்தனத்துடன், சம அளவு பால் மற்றும் தேன் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் முகத்தைக் கழுவினால் சரும வறட்சி நீங்கி மிருதுவான பொலிவு அதிகரிக்கும். இதை தினமும் செய்து வரலாம்.
முகத்தில் உருவாகும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்க, ஒரு ஸ்பூன் சிவப்பு சந்தனத்துடன், எலுமிச்சை சாறு சிறிதளவு கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடத்திற்கு பிறகு முகத்தைக் கழுவ, சருமத் துளைகளில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கும். முகத்தை பொலிவாகவும் வைக்கும். Ranbir Kapoor-Alia Bhatt reveal daughter Raha’s face: முதல் முறையாக குழந்தை முகத்தை ரசிகர்களுக்கு காட்டிய ரன்பீர் ஆலியா... குழந்தை யாரை போல இருக்கிறார்?.!
தழும்புகளுக்கு மருத்தாகும் சந்தனம்: முக சருமத்தை கைகளால் தொடக் கூடாது. இது முகப் பருக்களை வர வைத்து அதிகரிக்கும். இவ்வாறு முகத்தில் பருக்கள் அதிகமாக இருப்பவர்களும் அதன் தழும்புகள் இருப்பவர்களும், சிவப்பு சந்தனத்தை தொடர்ந்து பயன்படுத்தி வர பருக்களும் தழும்புகளும் நீங்கும். இதற்கு,
சிவப்பு சந்தனத் தூள் 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் ½ ஸ்பூன் கலந்து முகத்தில் மெதுவாக பூச வேண்டும். பின் 15 நிமிடத்திற்கு பின் முகத்தை கழுவ வேண்டும். இந்த பேக் பரு தழும்புகள் மட்டுமின்றி, வெயிலினால் ஏற்படும் கருமையையும் போக்குகிறது.
சீரான நிறத்தை அளிக்கும் சிவப்பு சந்தனம்: சிவப்பு சந்தனம் சருமத்தைப் பாதுகாப்பதுடன், நிறத்தையும் அதிகரிக்க செய்யும். இது சருமத்தை ஆரோக்கியமாக மாற்றி நிறத்தை அழகானதாக பளபளப்பாக்கும். இதற்கு, சம அளவு பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், மற்றும் சிவப்பு சந்தனத்தூள் ஆகியவற்றை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும்.
சிவப்பு சந்தனத் தூளுடன், சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது தயிர் சேர்த்து முகம் மற்றும் உடலில் பூசி 15 நிமிடத்திற்கு பிறகு கழுவலாம். தினமும் குளிக்கையில் இதைப் பின்பற்றலாம்.
கருவளையம் போக, சிவப்பு சந்தனத்தை தண்ணீர் அல்லது பாலில் கரைத்து பஞ்சில் நனைத்து கருவளையம் இருக்கும் பகுதியில் வைக்க வேண்டும். தினமும் இதை இரவில் தொடர்ச்சியாக செய்து வர கருவளையம் விரைவில் நீங்கும்.