CEAT Launches Sportrad, Crossrad Tyres: டூ-வீலர்களுக்கான புதிய சியட் டயர்... விற்பனைக்கு அறிமுகம்..!
சியட் நிறுவனம் உயர் ரக மோட்டார்சைக்கிள்களுக்கான புதிய டயர் வகைகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
ஜனவரி 22, புதுடெல்லி (New Delhi): சியட் (CEAT) நிறுவனம், புதிய ஒரு ஸ்டீல் ரேடியல் வகை டயரை (Steel Rad tyre) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஸ்போர்ட்ரேட் (SPORTRAD) மற்றும் கிராஸ்ரேட் (CROSSRAD) என இரு விதமான தேர்வுகளில் புதிய டயர்கள் விற்பனைக்கு கிடைக்கின்றது. ஸ்போர்ட்ஸில் ஈடுபடுபவர்களுக்கு இந்த ஸ்போர்ட்ரேட் டயர் மிகுந்த உதவி அளிக்கக் கூடியதாக இருக்கும். அதேவேளையில், இதன் கிராஸ்ரேட் தேர்வானது எந்த மாதிரியான சாலையாக இருந்தாலும் சமாளிக்கும் வசதியைக் கொண்டதாக தயார் செய்யப்பட்டுள்ளது. எனவே அட்வென்சர் பயணத்தை மேற்கொள்வதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்த கிராஸ்ரேட் டயர் மிகுந்த உதவி அளிக்கக் கூடியதாக இருக்கும். Pradhan Mantri Suraksha Bima Yojana: பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா.. அரசின் விபத்துக் காப்பீட்டு திட்டம்... இதனைப் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.. வாங்க..!