ஜனவரி 22, புதுடெல்லி (New Delhi): பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா (Pradhan Mantri Suraksha Bima Yojana) ஒரு விபத்து காப்பீட்டு திட்டம். இந்த திட்டத்தில் பாலிசிதாரர் இறந்தால் மட்டுமே, அவர் பரிந்துரை செய்த நபருக்கு நிதித் தொகை வழங்கப்படும். இதில் 18 முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த பாலிசி வழங்கப்படுகிறது. இதன் ஆண்டு பீரிமியம் 20 ரூபாய் மட்டுமே. இந்த காப்பீட்டுத் திட்டதின் படி விபத்தில் உயிர் இழந்தால் ரூ.2 லட்சமும், பாதி அல்லது ஏதேனும் உடல் பாகங்கள் செயலற்று போனால் ரூ.1 லட்சமும் வழங்கப்படுகிறது. Ayodhya Ram Mandir Inauguration: ராமர் கோயில் திறப்பு விழா ஆரம்பம்... குவியும் பிரபலங்கள்..!

இந்த திட்டத்தில் சேர நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை அணுக வேண்டும். வங்கியில் நீங்கள் தேவையான படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அனைத்து முக்கிய வங்கிகளும் இந்த திட்டத்தின் பங்கேற்பாளர்களாக இருக்கின்றன.