First EV With Sodium Battery: சோடியம் அயன் பேட்டரி கொண்ட முதல் இ-கார்.. மாஸ் காட்டும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்..!

ஃபோக்ஸ்வேகன் நிறுவனமானது சோடியம் அயன் பேட்டரி கொண்ட முதல் எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்துள்ளது.

Volksawagen (Photo Credit: @its_upcoming X)

ஜனவரி 02, டெல்லி (Delhi): உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volksawagen) ஆதரவில் இயங்கும் நிறுவனம் தான் ஜேஏசி மோட்டார்ஸ் (JAC Motors). இது ஓர் சீன வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனமே சோடியம் அயன் பேட்டரி கொண்ட முதல் எலெக்ட்ரிக் காரை வெளியீடு செய்துள்ளது. பொதுவாக எலெலக்ட்ரிக் வாகனங்களில் லித்தியம் அயன் (Lithium-ion) பேட்டரி பேக்கே பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. HC On Rape and Maintenance Of Child: பாலியல் குற்றச்சாட்டுகள் ரத்து... கர்நாடக நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு..!

ஜேஏசி யிவெய் இவி சீஹோல் இ10எக்ஸ்: ஜேஏசி யிவெய் இவி சீஹோல் இ10எக்ஸ் (JAC Yiwei EV Sehol E10X), இதுவே சோடியம் அயன் பேட்டரி பேக்கைக் கொண்ட எலெக்ட்ரிக் கார் ஆகும். இந்த காரின் டெலிவரி பணிகள் இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது. இந்த காரில் 25 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது 120 Wh/kg எனெர்ஜி டென்சிட்டி கொண்டது. மேலும், 3சி முதல் 4சி சார்ஜிங் திறன் கொண்டது. இந்த அதிக வேக திறன் வாயிலாக 10 சதவீதம் முதல் 80 சதவீதம் சார்ஜ் திறனை வெறும் 20 நிமிடங்களில் ஏற்றலாம். மேலும், முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 252 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும்