Karnataka High Court (Photo Credit: Wikipedia)

ஜனவரி 02, கர்நாடகா (Karnataka): கர்நாடகாவில் நபர் ஒருவர், ஒரு பெண்ணை காதல் செய்து வந்துள்ளார். மேலும் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் அந்தப் பெண் வேறொரு நபரை திருமணம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த பெண், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் உறவில் இருந்து, குழந்தை கொடுத்ததாக அந்த நபரின் மேல் பலாத்கார வழக்கின் கீழ் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கானது நான்கு வருடங்களாக விசாரணையில் இருந்து வருகிறது.  Zomato Increase Platform Fee: இனி ஒவ்வொரு முறை உணவு டெலிவரிக்கு ரூ.4 கட்டணம்; சத்தமே இல்லாமல் உயர்த்திய ஜோமாடோ.!

கர்நாடக நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு: தற்போது இந்த வழக்கானது விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எம் நாகப்பிரசன்னா, அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதன்படி, புகார்தாரர் மீது இருந்த பாலியல் குற்றச்சாட்டுகளை ஐபிசி 376 பிரிவின் கீழ் ரத்து செய்துள்ளார். ஏனெனில் இருவரின் விருப்பப் பேரிலேயே உறவானது தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் மீது சட்டப்பிரிவு 506, 417, 420 இன் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு பிறந்த குழந்தைக்கு மாதம் தோறும் ரூபாய் பத்தாயிரம் செலுத்துமாறு புகார்தாரர்க்கு உத்தரவிட்டுள்ளார்.