Tata PUNCH EV: டாடா எலெக்ட்ரிக் கார் வெளியீடு... அதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?.!
டாடா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் காரான டாடா பன்ச் இவியைத் தற்போது இந்தியாவில் வெளியிட்டுள்ளது.
ஜனவரி 05, சென்னை (Chennai): மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய டாடா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்றான டாடா பன்ச் இவி (Tata Punch EV), தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் (Smart), ஸ்மார்ட் + (Smart +), அட்வென்ஜர் (Adventure), எம்பவர்டு (Empowered) மற்றும் எம்பவர்டு + (Empowered +) என மொத்தம் 5 வேரியண்ட்களில் (Variants) இந்த கார் விற்பனைக்கு கிடைக்கும். Vaseline Beauty Hacks: தலை முதல் கால் வரை... பொலிவேற்றும் வாஸ்லின்..!
சிறப்பம்சங்கள்: டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்மார்ட் டிஜிட்டல் டிஆர்எல்கள், R16 டைமண்ட் கட் அலாய் வீல்கள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி ப்ரோக்ராம் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி 0.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரில் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளது மட்டும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.