
ஏப்ரல் 10, வாஷிங்டன் (World News): அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் (Donald Trump) பதவியேற்ற பிறகு, பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு பரஸ்பர வரியை உயர்த்தினார். இதில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய தயாரிப்புகளுக்கான வரி 27 சதவீதமாக உயர்த்தப்பட்டது. சீனா இந்த வரி விதிப்புக்கு எதிராக, அமெரிக்க தயாரிப்புகளுக்கான வரியை உயர்த்தி பதிலடி கொடுத்தது. இதனால், நேற்று முன்தினம் (ஏப்ரல் 08) சீனாவுக்கான வரியை மட்டும் 104 சதவீதமாக உயர்த்தினார். சீனா, அமெரிக்காவுக்கான வரியை மீண்டும் 84 சதவீதமாக உயர்த்தியது. Indonesia Earthquake: இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு..!
90 நாட்களுக்கு நிறுத்தம்:
இந்நிலையில், சீனாவை தவிர இந்தியா உட்பட 75க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான பரஸ்பர வரி விதிப்பை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், சீனாவிற்கு அமெரிக்கா விதிக்கும் வரியை, 125 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும். மேலும், இந்தியா உட்பட 75க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவை அணுகி, பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளன. எனவே, அவர்களுக்கான வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் 10% என்ற குறைக்கப்பட்ட பரஸ்பர வரி அமலில் இருக்கும்.