Tariff On Automobiles (Photo Credit: @bsindia X)

ஏப்ரல் 03, வாஷிங்டன் (World News): அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்ற டொனால்டு டிரம்ப் (Donald Trump), பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க பொருட்களுக்கு உலக நாடுகள் விதிக்கும் அதே அளவு வரியை, அந்த நாடுகளுக்கு விதிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். Myanmar Earthquake: மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; உருக்குலைந்த கட்டிடங்கள்.., பலி எண்ணிக்கை 2,700 ஆக உயர்வு..!

பரஸ்பர வரி விதிப்பு:

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 02) இதற்கான அறிவிப்பை அதிபர் டிரம்ப் வெளியிட்டார். அதில், அமெரிக்க வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள். இது எங்கள் பொருளாதார சுதந்திரப் பிரகடனம். இன்றைய நாள், அமெரிக்காவின் வரலாற்றில் என்றென்றும் நினைவு கூரப்படும். அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் மீண்டும் வளர்ச்சி பெரும். வெளிநாட்டு தயாரிப்பு ஆட்டோமொபைல்களுக்கு, 25% வரி விதிக்கப்படுகிறது.

அதிபர் டிரம்ப் அதிரடி:

உலக நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கும் அதே அளவு வரியை, பரஸ்பரமாக விதிக்கின்றோம். அமெரிக்காவை சிறந்த நாடாக மாற்றப் போகிறோம். இவ்வாறு அவர் கூறினார். அதிபர் டிரம்பின் அதிரடி அறிவிப்பால், பல்வேறு நாடுகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் என கூறப்படுகிறது.