US President Donald Trump Tariff on Cars (Photo Credit: @CryptoWithJoyce X)

மார்ச் 27, வாஷிங்டன் (World News): அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் (US President Donald Trump) பதவியேற்ற முதல் நாளிலிருந்து, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இதனிடையே, அவர் இறக்குமதி வரிகளை அதிகரித்து, அண்டை நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தற்போது, அவர் வெளிநாட்டு கார்களுக்கு அதிக வரி விதிப்பை அறிவித்து வெளியிட்டுள்ளார். Dallas Airport: விமான நிலையத்தில் மக்களின் முகம் சுளிக்க வைத்த பெண்ணின் செயல்.. நிர்வாணமாக வந்து ரகளை.!

புதிய வரி விதிப்பு:

இதுதொடர்பாக, ஓவல் அலுவலகத்தில் நிரூபர்கள் சந்திப்பில் டிரம்ப் கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, வரும் ஏப்ரல் 02ஆம் தேதி முதல் 25% வரிகள் விதிக்கப்படும். ஏப்ரல் 03ஆம் தேதி முதல் வரி வசூல் துவங்கும். இந்த புதிய வரி விதிப்பு இனிமேல் நிரந்தரமாக இருக்கப் போகிறது.

பொருளாதார வளர்ச்சி:

அமெரிக்க பொருளாதாரத்தையும் தொழில்துறையையும் மேம்படுத்துவதே புதிய வரி விதிப்பின் முக்கிய நோக்கமாகும். இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். வாகன கட்டணக் கொள்கையை வடிவமைப்பதில், டி.ஓ.ஜி.இ., குழு தலைவர் எலான் மஸ்கிற்கு எந்த தொடர்பும் இல்லை. புதிய வாகனத் துறை வரிகள், மிக விரைவில் அமலுக்கு வரும். இவ்வாறு அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.