Cars With Sunroof: சன்ரூஃப் கார்களை வாங்க விருப்பமா? கொஞ்சம் இதை தெரிஞ்சிக்கிட்டு போங்க.!
சன்ரூப்பின் நன்மைகள் நன்கு அறியப்பட்டிருந்தாலும், வாங்குவதற்கு முன் அதன் குறைபாடுகளைப் புரிந்துகொள்வது அவசியம்.
செப்டம்பர் 16, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் எல்லோரும் சன்ரூஃப் கார்களை (Sunroof Car) வாங்க விரும்புகிறார்கள். சன்ரூப்பின் நன்மைகள் நன்கு அறியப்பட்டிருந்தாலும், வாங்குவதற்கு முன் அதன் குறைபாடுகளைப் புரிந்துகொள்வது அவசியம். அதனைப் பற்றி இப்பதிவில் காணலாம். TATA Motors: ரூ.9000 கோடி செலவில் டாடா ஜாகுவார் கார் உற்பத்தி ஆலை., 5000 பேருக்கு வேலை.. தமிழக இளைஞர்களே தயாராகுங்க.!
பிரச்சனைகள்:
- சன்ரூஃப்பைச் சுற்றியுள்ள ரப்பர் சீல் சேதமடைந்தால் மழையின் போது காருக்குள் தண்ணீர் புகுந்துவிடும்.
- சன்ரூஃப் கிளாஸ் சிறிதளவு கூட விரிசல் ஏற்பட்டால், உடனடியாக அதை சரிசெய்ய வேண்டியது அவசியம். இல்லையெனில், வாகனம் ஓட்டும்போது அது முற்றிலும் உடைந்து, கடுமையான பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தும்.
- சன்ரூஃப் கார்களுக்கு எலெக்ட்ரிக் பிரச்சனைகளும் ஒரு பிரச்சனையாக உள்ளது. உங்கள் சன்ரூஃபை திறந்து, எலெக்ட்ரிக் கோளாறு காரணமாக அதை மூட முடியாமல் போவதுண்டு.
- சன்ரூப்பின் எலெக்ட்ரிக் பாகங்கள் சில நேரங்களில் ஃபெயிலியர் ஆகும், திறந்த பிறகு அதை மூட முடியாது.
- இந்தியா போன்ற நாடுகளில் சன்ரூஃப் ஒரு தேவையில்லாத அம்சம் தான். சன்ரூஃபை மிக குறைவான நேரம் மட்டுமே பயன்படுத்துகிறோம். அதற்காக அதிக தொகையை செலவு செய்ய வேண்டியதுள்ளது. இதனால் சன்ரூஃப் பொருத்தப்பட்ட காரை வாங்கும் முன்பு யோசித்து முடிவு செய்யுங்கள்.