Vietnamese EV Maker: தமிழகத்திற்கு வரப்போகும் புதிய கார் உற்பத்தி தொழிற்சாலை... எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?..!
தற்போது வியட்நாம் நாட்டைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் ஒன்று தமிழகத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
ஜனவரி 04, புதுடெல்லி (New Delhi): வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் வின்ஃபாஸ்ட் (VinFast). இந்நிறுவனம் இந்தியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் தனது ஆலையை நிறுவி வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த ஆலை தமிழகத்தில் அமையவுள்ளது. வழக்கமாக தமிழகத்தை தேர்வு செய்யும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பெரும்பாலும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் தான் தனது ஆலையை அமைப்பார்கள். ஆனால் வின்ஃபாஸ்ட் நிறுவனம், தூத்துக்குடி மாவட்டத்தில் தனது ஆலையை அமைத்து வாகன உற்பத்தியில் ஈடுபட முடிவு செய்துள்ளது. Pongal Gift in Ration Shop 2024: பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக ரூ.500... பொதுமக்கள் மகிழ்ச்சி..!
இந்நிறுவனம் தமிழகத்திலேயே வாகனத்தை அசெம்பிள் செய்யும் ஆலையையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உருவாக்கப்பட்டால் அதில் ஆண்டுக்கு 50 ஆயிரம் கார்களை தயாரிக்கும் திறன் கொண்டதாக ஆலை உருவாக்கப்பட வாய்ப்புகள் உள்ளனஅமையும். அதற்காக நிறுவனம் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான முதலீட்டை தமிழகத்திற்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.