Jitendra Primo Launched: ஜிதேந்திரா பிரைமோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்.. அதன் சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?.!
ஜிதேந்திரா இவி நிறுவனம் தற்போது மிக மிக குறைவான விலையில் ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
மே 23, புதுடெல்லி (New Delhi): மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் மின்சார வாகன (EV) உற்பத்தி நிறுவனம் ஜிதேந்திரா இவி (Jitendra EV). இது ஆகும். இந்த நிறுவனமே தற்போது மிக மிக குறைவான விலையில் ஜிதேந்திரா பிரைமோ (Jitendra Primo) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அதன் விலை ரூ. 79,999 ஆகும்.
பிரைமோவின் முக்கிய அம்சங்கள்: இந்த வாகனம் ஒரு முறை சார்ஜில் 80 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதில் 60V 24Ah லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 65 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். வெறும் 3.5 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை சார்ஜ் செய்தாலேயே இந்த ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் இதில் 600W BLDC மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. World Turtle Day 2024: ஆமைகள்.. காலத்தின் சாட்சிகள்.. உலக ஆமைகள் தினம்..!
இதுதவிர சைடு ஸ்டாண்டு சென்சார், டிஸ்க் பிரேக் (முன் வீலில் இடம் பெற்றிருக்கும்), அலாய் வீல், டெலிஸ்கோபிக் மற்றும் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் ஆகியவையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக நான்கு விதமான நிற தேர்வுகள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படுகின்றது. கருப்பு, சிவப்பு, வெள்ளை மற்றும் சில்வர் நிறங்களே அவை ஆகும். குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தேடுபவர்களுக்கு, நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்ற ஸ்கூட்டர் தேடுபவர்களுக்கு, ஸ்டைலான மற்றும் அம்ச நிறைந்த ஸ்கூட்டர் தேடுபவர்களுக்கு இந்த வாகனம் சிறந்த தேர்வு ஆகும்.