ஆகஸ்ட் 01, சென்னை (Technology News): ஏத்தர் எனர்ஜி நிறுவனம், இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் அவற்றின் சிறந்த செயல்பாடு, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் கவர்ச்சியான வடிவமைப்பு ஆகியவற்றால் சந்தையில் தனித்துவமாக உள்ளன. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வரிசையில், "ஏத்தர் 450S" (Ather 450S) என்ற மாடலை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இது 450X மாடலை விட குறைந்த விலையில், அதே சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. AI Job Impact List: 40 வேலைகளுக்கு AI வைத்த ஆப்பு.. உங்க வேலை என்ன? கவனமாக இருங்க.. லிஸ்ட் இதோ..!
ஏத்தர் 450S சிறப்பம்சங்கள் (Ather 450S Specifications):
- இது 5.4 kW மோட்டார் மற்றும் 22 Nm டார்க் திறன் கொண்டது. இதன்மூலம், வெறும் 3.9 விநாடிகளில் 0 முதல் 40 கி.மீ வேகத்தை எட்ட முடியும். இதன் அதிகபட்ச வேகம் 90 கி.மீ ஆகும்.
- ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கு இணையான அனுபவத்தை அளிக்கிறது. மேலும், இதில் ஸ்மார்ட் எக்கோ, எக்கோ, ரைடு, மற்றும் ஸ்போர்ட் போன்ற பல ரைடிங் மோடுகள் உள்ளன.
- ஏத்தர் 450S மாடலில் 3.7 kWh பேட்டரி உள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 450S மாடல் சுமார் 105 கி.மீ வரையிலும், 450X மாடல் சுமார் 130 கி.மீ வரையிலும் செல்லும். இந்த ஸ்கூட்டர்களுக்கு 8 ஆண்டுகள் அல்லது 80,000 கி.மீ வரை பேட்டரி வாரண்டியும் வழங்கப்படுகிறது.
- மற்றொரு முக்கிய அம்சம் அதன் தொழில்நுட்பம். 7-இன்ச் TFT டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ப்ளூடூத் இணைப்பு, கூகுள் மேப்ஸ் நேவிகேஷன், வாட்ஸ்அப் அறிவிப்புகள் மற்றும் ஓவர்-தி-ஏர் அப்டேட்கள் போன்ற ஸ்மார்ட் அம்சங்கள் உள்ளன.
- இதன் வடிவமைப்பை பொறுத்தவரை, கூர்மையான மற்றும் ஸ்போர்ட்டியான வடிவமைப்புடன், பார்ப்பதற்கு மிகவும் அட்ராக்டிவ் ஆக உள்ளது.
விலை:
ஏத்தர் 450S மாடல் விலை, அது வெளியாகும் நகரத்திற்கு ஏற்ப மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூ. 1,48,047 எக்ஸ்-ஷோரூம் விலையில் உள்ளது. இது குறைந்த விலையில் ஒரு பிரீமியம் அனுபவத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.