மே 23, புதுடெல்லி (New Delhi): இந்த பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக கடல் ஆமைகள் (Turtle) வாழ்ந்து வருகின்றன. டைனோசர்கள் பூமியில் சுற்றித்திரிந்த காலத்திற்கு முன்பே இவை இருந்ததற்கான புதைபடிவங்கள் கிடைத்துள்ளன. 225 வகையான கடல் ஆமைகள் உலகில் காணப்பட்டாலும், இந்திய கடல் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் காணப்படுகின்றன.
கடல் ஆமைகளின் மேலுறை ஓடு இவற்றின் தனித்தன்மை. இது இயற்கையின் கவசம் போன்று இவற்றை பாதுகாக்கிறது. கடல் ஆமைகள் கடலில் வாழ்ந்தாலும், முட்டையிடுவதற்காக கரைக்கு வரும். இரவில் மணலில் குழி தோண்டி 100 முதல் 200 முட்டைகள் வரை இடும். ஆமைகள் முட்டையிலிருந்து வெளிப்பட்டு கடலை நோக்கி பயணம் செய்யும். Presidential Candidate Rally Stage Collapse: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மேடை சரிந்து விழுந்து 5 பேர் பலி., 50 பேர் படுகாயம்... நூலிழையில் உயிர்தப்பிய வேட்பாளர்..!
கடல் மாசுபாடு, மீன்வள ஆய்வின் போது கடல் ஆமைகள் சிக்கி இறப்பது போன்ற காரணங்களால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இயற்கையின் சமன்பாடில் முக்கிய பங்கு வகிக்கும் கடல் ஆமைகளை பாதுகாப்பது நம் கடமை. அதற்காக தான் உலக ஆமை தினம் (World Turtle Day) ஒவ்வொரு ஆண்டும் மே 23 அன்று அனுசரிக்கப்படுகிறது.