Salem Road Accident (Photo Credit: YouTube)

மே 05, மேட்டூர் (Salem News): சேலம் மாவட்டம், சாம்பள்ளி ஊராட்சியில் மாசிலாபாளையத்தை சேர்ந்த தம்பதி வசந்தகுமார் (வயது 32) - ஜமுனா (வயது 32). இத்தம்பதிக்கு சஜித் (வயது 12), அஸ்விந்த் (வயது 9) என இரு மகன்கள் உள்ளனர். கொளத்துாரை அடுத்த மேல்மூலப்பாறையூரில், ஜமுனாவின் பெற்றோர் வசிக்கின்றனர். Gold Silver Price: வாரத்தின் முதல் நாள் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம் இதோ..!

தம்பதி பலி:

இந்நிலையில், வசந்தகுமார் தனது மாமனார் வீட்டுக்கு மனைவியுடன் ஸ்கூட்டரில் சென்றுள்ளார். நேற்று (மே 04) மாலை 4:20 மணிக்கு புறப்பட்டார். மூலப்பாறையூர் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து தரைப்பாலத்தின் தடுப்புச்சுவரில் அதிவேகமாக மோதி (Road Accident) விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, கொளத்துார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.