2024 Kawasaki Ninja ZX-6R: கவாஸாகி நிறுவனத்தின் புதிய பைக் வெளியீடு: மாஸ் காட்டும் 2024 நிஞ்சா இசட்எக்ஸ் 6 ஆர்.!!
இந்தியா பைக் வீக் 2023 விழாவில் கவாஸாகி நிறுவனம் 2024 நிஞ்சா இசட்எக்ஸ் 6 ஆர் மோட்டார் சைக்கிளை வெளியீடு செய்துள்ளது.
டிசம்பர் 12, கோவா ( Goa) : ஒவ்வொரு ஆண்டும் உலகப் புகழ்பெற்ற நிகழ்ச்சியாக இந்தியா பைக் வீக் ( India Bike Week) நடைபெற்று வருகிறது. தற்போது இந்த ஆண்டுக்கான இந்த திருவிழா தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு நிறுவனமும் அவர்களது புதிய வாகனங்களை அறிமுகப்படுத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
நிஞ்சா இசட்எக்ஸ் 6 ஆர்: அதன்படி கவாஸாகி நிறுவனம் அதன் 2024 நிஞ்சா இசட்எக்ஸ் 6 ஆர் (Kawasaki Ninja ZX-6R) மோட்டார் சைக்கிளை வெளியீடு செய்துள்ளது. ஆனால் இது இன்னும் விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை. ஏற்கனவே இந்த வாகனத்தின் 2023 வெர்ஷன் உள்ளது. அதற்குள் பல கூடுதல் அம்சங்களை இணைத்து, அப்டேட் வெர்ஷன் ஆக, இந்த பைக் தற்போது வெளியாக உள்ளது. ஆனால் என்னென்ன புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது என்பதனைப் பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை. Rajini Fans Wait to See Thalaivar: தலைவர் தரிசனத்திற்காக ரஜினிகாந்தின் வீட்டு வாசலில் காத்திருக்கும் ரசிகர்கள்: தலைவா தலைவா என கூக்குரலிட்டு அழைப்பு.!
பைக் விலை: இந்த மோட்டார் சைக்கிளின் விலையும் வெளியிடப்படவில்லை. ஆனால் இதன் விலை 12 லட்சத்திற்கு அதிகமாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வாகனம் 2024 ஜனவரிக்குள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மோட்டார் சைக்கிளில் 636 சிசி திறன் கொண்ட இன்லைன் 4 சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் பல பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அதுமட்டுமின்றி இந்த மோட்டார் சைக்கிளில் சூப்பரான பிரேக்கிங் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது.