டிசம்பர் 12, சென்னை (Chennai): தமிழ் திரையுலகில் மூத்த நடிகராகவும், இந்திய திரையுலகில் முன்னணி நடிகராகவும் இருந்து வருபவர் ரஜினிகாந்த் (Rajinikanth). இவர் இன்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தன்னை வாழவைத்த தமிழ் மக்களுக்கு நன்றியோடு இருப்பேன் என எப்போதும் கூறும் ரஜினிகாந்த், கடந்த 40 ஆண்டுகளை கடந்து திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். இன்று அவரின் பிறந்தநாளையொட்டி, ரஜினி ரசிகர்கள் பலரும் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு முன்பு ரஜினியை நேரில் பார்க்க குவிந்துள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல ரஜினி ரசிகர்கள் தங்களின் அன்பு தலைவரை வெளியே அழைத்து கூக்குரலிட்டவாறு காத்திருக்கின்றனர். Jewish Girl Restricted to Use Restroom: பாலஸ்தீனம் - இஸ்ரேல் போர் விவகாரம்: யூத பெண்மணியை கழிவறையை பயன்படுத்த விடாமல் தடுத்து, வெறுப்புணர்வை உமிழ்ந்த உணவக அதிகாரிகள்.!
#WATCH | Tamil Nadu: Fans of Rajinikanth gather outside his residence in Chennai, as the actor celebrates his 73rd birthday. pic.twitter.com/COljHLR0ea
— ANI (@ANI) December 12, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)