MG Windsor EV: புதிதாக களம் இறங்கப் போகும் விண்ட்ஸர் இவி கார்.. எம்ஜி நிறுவனத்தின் மாஸ் அறிவிப்பு..!
எம்ஜி நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் விண்ட்ஸர் இவி எனும் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.
ஆகஸ்ட் 28, சென்னை (Chennai): எம்ஜி (MG) நிறுவனம் வெகு விரைவில் இந்திய சந்தையில் விண்ட்ஸர் இவி (Windsor EV) எனும் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் வருகின்ற செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி ஆகும். மேலும் இந்த கார் மாடலுக்கான புக்கிங் பணிகளை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது இந்தியாவின் முதல் சியூவி ரக கார் மாடலாகும். T7 Heavy Duty Tractor: மாட்டு சாணத்தில் இயங்கும் டி7 டிராக்டர்.. சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?!
சிறப்பம்சங்கள்: இந்த காரில் 15.6 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதிகளுடன் வழங்கப்பட இருக்கின்றது. இதை சமீபத்திய டீசர் படம் வாயிலாகவே எம்ஜி நிறுவனம் உறுதிப்படுத்தியது. மேலும் 8.8 அங்குல டிஜிட்டல் டிரைவர்களுக்கான இருக்கை, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பவர்டு சீட், பன்முக வண்ணங்களில் ஒளிரும் வசதிக் கொண்ட ஆம்பியன்ட் லைட், ஒயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் பவர் டெயில்கேட் ஆகிய அம்சங்களும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. அதுமட்டுமின்றி இந்த காரின் விலை மற்றும் அதுபற்றிய முக்கிய விபரங்களை இன்னும் அதிகாரப்பூர்வமாக எம்ஜி அறிவிக்கவில்லை.