அக்டோபர் 22, சென்னை (Technology News): பிரபல செயற்கை நுண்ணறிவு தளமான ஓபன் ஏஐ சாட்ஜிபிடி மக்களுக்கு பல வகையில் உதவி செய்து வருகிறது. சர்வதேச அளவில் 800 மில்லியன் பயனர்களின் கவனம் பெற்ற ஓபன் ஏஐ (Open AI) நிறுவனத்தின் (ChatGPT) சாட்ஜிபிடி மாணவர்களுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகவும், நாம் தெரிந்து கொள்ள முடியாத சில விஷயங்களை எளிமையாக கற்றுக் கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆங்கிலம் மட்டுமல்லாது இதர மொழிகளை கற்றுக்கொள்வதிலும் இதன் பங்கு அதிகம் என்று தான் கூற வேண்டும். இதனிடையே ஓபன் ஏஐ சாட்ஜிபிடி பல்ஸ் என்ற புதிய அம்சத்தையும் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த வசதியானது சாட்ஜிபிடி ப்ரோ பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்த நிலையில், பயனர்களின் முந்தைய உரையாடல்கள், காலண்டர் நிகழ்வுகள், மின்னஞ்சலை அடிப்படையாகக் கொண்டு தினசரி அப்டேட்டுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
சாட்ஜிபிடி அட்லாஸ் என்றால் என்ன?
இதனைத் தொடர்ந்து தற்போது சாட்ஜிபிடி அட்லாஸ் (ChatGPT Atlas) என்ற பிரவுசரையும் அறிமுகம் செய்துள்ளது. ஏஐ தொழில்நுட்பத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த ப்ரவுசர் பயனர்களின் தேடுதல் அனுபவத்தை எளிமையாக மாற்றும் என ஓபன் ஏஐ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் க்ரோம் போல அட்ரஸ் பார் இந்த பிரவுசரில் கிடையாது. AI ஏஜென்ட் போல செயல்பட்டு பயனர்களுக்கு தேவையான தகவல்களை விரைவில் தேடித்தரும். பயனர்கள் தங்களது நேரத்தை செலவழித்து தகவல்களை திரட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இது சாட்ஜிபிடியுடன் இணைந்து செயல்படுவதன் காரணமாக ஒரே டேபில் இரண்டையும் நாம் பயன்படுத்தலாம். ChatGPT New Update: சாட்ஜிபிடி பிரியர்களே ரெடியா?.. வருகிறது அப்டேட்.. இவர்களுக்கெல்லாம் ஆப்பு.!
அட்லாஸ் பிரவுசரின் சிறப்பம்சங்கள் (Atlas Browser Features):
பயனர்கள் செல்ல வேண்டிய இடத்தை கூறுவதன் மூலம் அட்லாஸ் பிரவுசர் அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கான பயணத்திடம், தங்கும் இடங்கள், சுற்றுலா தளங்கள், உணவகங்கள் என அனைத்தையும் தயார் செய்துவிடும். டிக்கெட் முன்பதிவுகளையும் கவனித்துக்கொள்ளும். பயனர்கள் நேர செலவின்றி நேர்காணலுக்கு தயாராவது, மின்னஞ்சல் உருவாக்குவது உள்ளிட்ட வேலைகளையும் அட்லாஸ் பிரவுசர் விரைவில் செய்து முடித்து விடும். இதனால் கூகுள் க்ரோம்-க்கு போட்டியாக அட்லாஸ் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. பயனர்கள் பார்வையிட்ட வலைதளங்களை நினைவில் வைத்துக் வைத்துக்கொள்ளும் அட்லாஸ் ப்ரவுசர், அதனை அடிப்படையாக கொண்டு தேவையான தகவல்களை வழங்கும். இந்த பிரவுசரில் செய்திகள், படங்கள், வீடியோக்கள் போன்றவற்றையும் எளிதில் தேட முடியும்.
பயனர்களுக்கு எளிமையான அனுபவம்:
பயனர்களின் தனியுரிமையை காக்கும் பொருட்டு இந்த பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளதால் மெமரிசை சாட்ஜிபிடி கணக்கில் மட்டும் சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் பயனர்களுக்கு விருப்பமில்லாத இணையதளங்களை Address Bar Toggle மூலம் கட்டுப்படுத்தலாம். Visibilityஐ ஆப் செய்வதன் மூலம் சார்ஜிபிடி அந்த தளத்தை மீண்டும் பயனருக்கு காண்பிக்காது. பயனர்களின் தரவுகளை தங்களது ஏஐ பயிற்சிக்காக அட்லாஸ் உபயோகிக்காது. இந்த பிரவுசர் தற்போது மேக் ஓஎஸ் Free, Plus, Pro, Go பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. விரைவில் விண்டோஸ், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனர்களுக்கும் அறிமுகமாகும்.
ChatGPT Atlas Browser Mac-ல் பதிவிறக்குவது எப்படி (Download ChatGPT Atlas on Mac)?
- முதலில் தாங்கள் உபயோகிக்கும் ப்ரவுசரை கிளிக் செய்து திறக்கவும்.
- பின் Search பாரில் chatgpt.com/atlas என்ற தளத்திற்கு செல்லவும்.
- அதில் கொடுக்கப்பட்டுள்ள macOS .dmg Installer File-ஐ பதிவிறக்கவும்.
- அடுத்து பதிவிறக்கிய ChatGPT Atlas App-ஐ Application Folder ல் டிராக் செய்து சேமிக்கவும்.
- Atlas -ஐ கிளிக் செய்து திறந்து தங்களது சாட்ஜிபிடி அக்கவுண்டை Log In செய்ய வேண்டும்.
- இதன்பின் Import Data என்பதில் நீங்கள் முன்னதாக உபயோகித்த ப்ரவுசரை கிளிக் செய்து Keychain Access கொடுப்பதன் மூலம் உங்கள் பழைய ப்ரவுசரில் உள்ள அனைத்தையும் அட்லாஸ் ப்ரவுசருக்கு மாற்றி உபயோகிக்கலாம்.