Comet Browser (Photo Credit : @perplexity_ai X)

அக்டோபர் 03, சென்னை (Technology): உலகளவில் கூகுள் குரோம், மோசில்லா பயர்பாக்ஸ், மைக்ரோசாப்ட் எட்ஜ் , ஆப்பிள் சஃபாரி போன்ற ப்ரவுசர்கள் மக்கள் பயன்பாட்டில் முன்னிலையில் இருக்கிறது. பயனர்கள் இந்த பிரவுசர்களின் உதவியுடன் இணையத்தில் மின்னஞ்சல் பரிமாறவும், தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பாக கையாளவும், புதுப்புது விஷயங்களை தேடவும், வேலைகளை தேடவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் Perplexity AI நிறுவனத்தின் Comet ப்ரவுசர் உலக அளவில் மக்கள் பயன்படுத்த அறிமுகமாகி இருப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

ப்ரவுசர் குறித்து நிறுவன சிஇஓ-வின் பதிவு :

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், Comet ப்ரவுசர் இப்போது அனைத்து பயணர்களும் டவுன்லோட் செய்து உபயோகிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை பயனர்கள் இலவசமாக உபயோகிக்கும் வகையிலும், ஏஐ உதவியுடன் பயனர்கள் பல புதிய விஷயங்களையும் அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளார். Snapchat Memories: ஸ்டோரேஜ் சேவைக்கு கட்டணம்.. ஸ்னாப்சாட் பயனர்களுக்கு ஷாக்.!

Comet ப்ரவுசர் என்றால் என்ன?

Comet ப்ரவுசர் என்பது செயற்கை நுண்ணறிவு உதவியுடன் இயங்கும் ப்ரவுசர் ஆகும். இதனை உபயோகிப்பதன் மூலம் பயனர்கள் தங்களது வேலைகளை எளிதில் முடிக்கவும், இணையத்தில் விரைவாக தேடவும், மின்னஞ்சல்களை ஒழுங்குபடுத்தவும், வேலைகளை எளிதாக்கவும் உதவுகிறது. Comet ப்ரவுசரை விண்டோஸ் மற்றும் மேக் சாதனங்களில் டவுன்லோட் செய்து உபயோகிக்கலாம். ஆனால் ஆண்ட்ராய்டு பயனர்கள் உபயோகிக்க ஃப்ரீ ரெஜிஸ்டர் (Pre-Register) செய்து பதிவு செய்ய வேண்டும்.

முன்னணி ப்ரவுசர்களுடன் போட்டி :

சமீப காலமாக ப்ரவுசர்களில் ஏஐ தொழில்நுட்ப வசதியுடன் பயனர்களுக்கு உதவும் விதத்தில் பல அம்சங்களை நிறுவனங்கள் மேம்படுத்தி வரும் நிலையில், தற்போது கூடுதல் ஏஐ வசதிகளுடன் Comet ப்ரவுசர் களமிறங்கியுள்ளது. இந்த ப்ரவுசரின் மூலம் பயனர்கள் முன்னணி இணைய அனுபவத்தை பெறலாம் என கூறப்படுகிறது. அதுபோல இந்த ப்ரவுசர் முன்னணி குரோம், எட்ஜ் போன்றவைக்கு மாற்றாகவும், போட்டியாகவும் இருக்கும் என கூறப்படுகிறது.

Comet ப்ரவுசரில் உள்ள வசதிகள் :

இந்த ப்ரவுசர் மூலமாக நாம் வழக்கமாக செய்யக்கூடிய பணிகளை எளிதாக செய்ய இயலும். மேலும் நமக்கு வரும் மின்னஞ்சல்களை படித்து காட்டுவது, முக்கிய நிகழ்வுகளை முன்கூட்டியே தெரிவிப்பது போன்ற வேலைகளையும் செய்யும். நாம் மற்ற பிரவுசர்களில் தகவல்களை தேடும்போது அது தனிதனி டேப்களாக வரும். ஆனால் Comet ப்ரவுசரின் ஏஐ வொர்க் ஸ்பேஸ் போல ஒரே இடத்தில் நாம் அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கும். தானாகவே டேபையும் க்ளோஸ் செய்யும் வசதி உள்ளது. நாம் தேடும் தகவல்களை வாய்ஸ் மற்றும் வீடியோ முறையிலும் சுருக்கமாக நமக்கு தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பெர்பிளெக்சிட்டியின் கமெட் ப்ரவுசர் அப்டேட் :