நவம்பர் 22, சென்னை (Technology News): மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய G57 Power ஸ்மார்ட்போனை வரும் நவம்பர் 24ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. சக்தி வாய்ந்த பேட்டரி, ப்ராசசர் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஸ்ப்ளே என பல்வேறு புதிய அம்சங்களுடன் வருவதால் இந்த ஸ்மார்ட்போன் பயனர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. Moto G57 Power ஸ்மார்ட்போன் 6.72 இன்ச் FHD+ டிஸ்ப்ளேயை கொண்டுள்ளது. இதில் 120Hz புதுப்பிப்பு வீதம் வழங்கப்பட்டுள்ளதால், ஸ்க்ரோலிங் மற்றும் கேமிங் அனுபவம் தரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Google Maps Update: கூகுள் மேப்பில் புதிய ஜெமினி ஏஐ அப்டேட்: நேரடி எச்சரிக்கை, மெட்ரோ டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட பல வசதிகள்.!
மோட்டோ G57 பவர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் (Moto G57 Power Specifications):
டிஸ்ப்ளே பாதுகாப்பிற்காக Gorilla Glass 7i வழங்கப்பட்டுள்ளது. இதனால் கீழே விழுதல், தூசி, தண்ணீர் போன்றவற்றில் இருந்து கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும். Snapdragon 6s Gen 4 சிப் செட் பயன்படுத்தப்பட்டுள்ளதால் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங் போன்றவற்றுக்கும் ஏற்றதாக இருக்கும். கேமரா அமைப்பை பொறுத்தவரையில் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50MP Sony LYTIA 600 கேமரா வழங்கப்பட்டுள்ளது. இது motoAI தொழில்நுட்பம் மூலம் படங்களை துல்லியமாகப் பதிவு செய்ய உதவும். ஒளி குறைந்த சூழலிலும் தரமான புகைப்படங்களை பதிவு செய்யும் திறன் பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 7,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
விரைவில் அறிமுகம்:
Strong. Sharp. Stunning.
That’s the moto g57 POWER — featuring the segment’s most durable 6.72” FHD+ 120Hz display for crystal-clear viewing. Protected with Gorilla Glass 7i, MIL-810H durability, and IP64 to take on anything. Launching 24 Nov on Flipkart, https://t.co/azcEfy2uaW pic.twitter.com/YJqfd150ME
— Motorola India (@motorolaindia) November 21, 2025