Skoda Electric SUV: மிகக்குறைவான விலையில் வெளியாக உள்ள எலக்ட்ரிக் கார்... ஸ்கோடா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..!
ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் புது, புது எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 29, புதுடெல்லி (New Delhi): செக் குடியரசு (Czech Republic) நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் (Skoda Auto) இந்தியா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இந்த கார் உலகமெங்கும் பல நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்த காரானது இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. Tata Institute's Rs 100 Cancer Tablet: புற்றுநோயை குணப்படுத்த வெறும் ரூ.100க்கு மாத்திரை... டாடா இன்ஸ்டிடியூட் சாதனை!
இதுகுறித்து அந்த கார் நிறுவனத்தின் போர்டு உறுப்பினர்களுள் ஒருவரான மார்டீன் ஜன் கூறியதாவது, "இந்தியாவில் ஸ்கோடா காரினை அறிமுகப்படுத்த, இந்தியாவில் உள்ள உள்ளூர் நிறுவனங்களுடன் ஸ்கோடா கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் முதல் ஸ்கோடா எலக்ட்ரிக் காராக என்யாக் கருதப்படுகிறது. ஏனெனில், ஸ்கோடா என்யாக் எலக்ட்ரிக் காரின் சாலை சோதனை பணிகள் ஏற்கனவே நம் இந்தியாவில் துவங்கிவிட்டன. ஆதலால், இந்தியாவில் எலக்ட்ரிக் கார்கள் வணிகத்தை கொஞ்சம் விலைமிக்க எலக்ட்ரிக் காரில் இருந்து ஸ்கோடா நிறுவனம் துவங்கவுள்ளது." என்று கூறியுள்ளார்.