ஆகஸ்ட் 10, வேலூர் (Vellore News): வேலூர் மாவட்டம் அல்லாபுரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சத்யா பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பிரியாணி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே இன்று காலை பிரியாணி செய்வதற்காக இஞ்சி, பூண்டு பேஸ்ட் அரைக்க முயற்சித்துள்ளார். அப்போது வழக்கமாக மசாலா அரைக்கும் இயந்திரத்தில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் தயாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வானிலை: 24 மாவட்டங்களில் அடித்து நொறுக்கப்போகும் கனமழை.. அடுத்த 3 மணிநேரத்திற்கு அலர்ட்.!
மின்சாரம் தாக்கி ஊழியர் பலி :
இயந்திரம் இயக்கப்பட்டபோது மின்சாரம் கசிந்ததாக தெரியவரும் நிலையில், அது தெரியாமல் ஈரமான கையுடன் செந்தில்குமார் இயந்திரத்தில் கை வைத்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பிற ஊழியர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இளைஞர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து செந்தில்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை :
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது செந்தில் குமார் இஞ்சி, பூண்டு பேஸ்ட் அரைக்கும் போது இயந்திரத்தை இயக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்த செந்தில்குமாரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கண்ணீருடன் வேலூருக்கு விரைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்சாரம் தாக்கி ஊழியர் சரிந்த பதைபதைக்க வைக்கும் வீடியோ :
வேலூர்: பிரியாணிக்கு இஞ்சி பூண்டு அரைக்கும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியர்- பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்#Vellore | #Electricity | #Death | #CCTV pic.twitter.com/3Qy7ZtEryr
— PttvOnlinenews (@PttvNewsX) August 10, 2025
வீடியோ நன்றி : புதிய தலைமுறை