ஆகஸ்ட் 28, குடியாத்தம் (Vellore News): வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அடுத்த நத்தமேடு கிராமத்தில் வசித்து வருபவர் குமார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரின் வீட்டின் அருகே வசித்து வருபவர் அத்திராமலு. அத்திராமலுவுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இன்று காலை தென்னை மரம் வெட்டப்பட்டுள்ளது. அப்போது தென்னை மரம் அருகில் இருந்த மின்கம்பியின் மீது சாய்ந்து விழுந்ததில், மின்கம்பம் உடைந்து குமார் வீடு அருகே விழுந்துள்ளது. Gold Rate Today: இல்லத்தரசிகள் தலையில் இடி.. ஒரு சவரன் ரூ.76,000ஐ நோக்கி பயணிக்கும் தங்கம் விலை.!
5 வயது சிறுமி மீது மின்சாரம் பாய்ந்து மரணம் :
இந்த சம்பவத்தில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த குமாரின் மூன்றாவது மகள் நவ்யா மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த குடியாத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தென்னை மரம் வெட்டியபோது சாய்ந்து மின்கம்பியின் மீது விழுந்து மின்கம்பி சாய்ந்ததில் சிறுமி உயிரிழந்தது தெரிய வந்தது. துரு துருவென சுறுசுறுப்போடு வீட்டை சுற்றி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தை மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.