பிப்ரவரி 29, புதுடெல்லி (New Delhi): இந்த நூற்றாண்டில் கடுமையாகப் பரவி வரும் மிகக் கொடிய நோய்களில் ஒன்றான புற்றுநோய் உலகின் மிக ஆபத்தான கொலைகார நோயாக மாறிவிட்டது. மேலும் முதல் முறை புற்றுநோய் (Cancer)பாதிப்பிற்குச் சிகிச்சை பெற்ற ஒருவருக்கு 2வது முறை கேன்சர் வர பல வாய்ப்புகள் உள்ளது. இதனை தடுக்கும் மருத்தை மாத்திரை வடிவில் டாடா இன்ஸ்டிடியூட் (TATA Institute) தற்போது கண்டுபிடித்துள்ளது. இந்த மாத்திரை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. ஒப்புதல் கிடைத்த பிறகு, வரும் ஜூன், ஜூலை மாதங்களில் சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. Pulse Polio Immunisation Campaign: போலியோ சொட்டு மருந்து முகாம்.. தமிழக அரசு அறிவிப்பு..!
இதுகுறித்து டாடா நினைவு மையத்தின் இயக்குனர் டாக்டர் ராஜேந்திர பத்வே (Rajendra Badve) கூறியதாவது, "இந்த மாத்திரை ஆராய்ச்சிக்காக எலிகளில் மனித புற்றுநோய் செல்கள் செலுத்தப்பட்டன. இதன் விளைவாக எலிகளில் டியூமர் கட்டி உருவானது. பின்னர் அந்த எலிகளுக்குக் கதிர்வீச்சுச் சிகிச்சை, மருந்து சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தப் புற்றுநோய் செல்கள் இறக்கும் போது, சிறிய துண்டுகளாக உடைந்து குரோமடின் துகள்களாக உருவாகிறது. இந்தத் துகள்கள் இரத்த ஓட்டம் மூலம் உடலின் பிற பகுதிகளுக்குச் செல்ல முடியும். அவை ஆரோக்கியமான செல்களுக்குள் நுழையும்போது, அந்தச் செல்களையும் புற்றுநோயுள்ளதாக மாற்றும் ஆற்றல் கொண்டவை.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண, டாக்டர்கள் எலிகளுக்கு ரெஸ்வெராட்ரோல் மற்றும் காப்பர் கொண்ட ஆக்ஸிஜனேற்ற மாத்திரைகளை வழங்கினர். இவை ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை உருவாக்குகிறது, அவை குரோமடின் துகள்களை அழிக்கின்றன. இந்த மாத்திரை புற்றுநோய் சிகிச்சையின் பக்கவிளைவுகளைச் சுமார் 50 சதவீதம் வரை குறைக்கும். புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுப்பதில் இது சுமார் 30 சதவீதம் வரை பயனுள்ளதாக இருக்கும். மேலும், இது கணையம், நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய்க்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மாத்திரையானது வெறும் ரூ.100க்கு கிடைக்கும்" என்று தெரித்துள்ளார்.