India’s Oscar Entry: உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட மலையாள திரைப்படம்: ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை.!
இயற்கை பேரிடர்களில் இருந்து மீண்டு வர மனிதர்கள் ஒருவருக்கொருவர் பாகுபாடுகளை தவிர்த்து மனிதநேயத்துடன் உதவ வேண்டும் என்பதை இந்த படம் வலியுறுத்துவதாக நடுவர்கள் குழு தெரிவித்திருக்கின்றனர்.
செப்டம்பர் 28, திருவனந்தபுரம் (Cinema News): மலையாள மொழியில் வெளியான “2018 - எவரிஒன் ஈஸ் எ ஹீரோ” திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்படும் படங்களின் வரிசையில் இடம்பெற்றிருக்கிறது. ஜூத் ஆண்டனி ஜோசப் (Judh Antony Joseph) இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், டோவினோ தாமஸ், நரேன், ஆசிப் அலி என பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
கேரளாவில் 2018-ஆம் ஆண்டு பெய்த தொடர் கனமழையால் ஊரே வெள்ளக்காடானது. உலகையே உலுக்கிய இந்தப் பேரிடரில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அந்த வெள்ளத்திலிருந்து மீண்டு வர போராடிய அனைவருமே ஹீரோக்கள் தான் என்ற கருத்தை இந்த படம் முன்வைத்திருந்தது. Google Earthquake Alerts India: அப்படிப்போடு.. இந்தியாவில் முதல் முறை..! நிலநடுக்கமா? இனி கவலை வேண்டாம்.. செல்போனிலேயே வரும் அலெர்ட்.. கூகுள் அசத்தல் அறிவிப்பு.!
30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 200 கோடி வரை வசூல் செய்து மாபெரும் வெற்றி அடைந்தது. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் கேரள மக்கள் அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு அளித்தனர்.
மேலும் இந்தப் படத்தில் நடித்ததற்காக டோவினோ தாமஸ் ஆசியாவின் சிறந்த நடிகர் விருதை பெற்றுள்ளார். இந்தியா சார்பில் இந்த ஆண்டு 4 தமிழ் படங்கள் உட்பட மொத்தம் 22 படங்கள் ஆஸ்கர் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.