Google Earthquake Alerts India: அப்படிப்போடு.. இந்தியாவில் முதல் முறை..! நிலநடுக்கமா? இனி கவலை வேண்டாம்.. செல்போனிலேயே வரும் அலெர்ட்.. கூகுள் அசத்தல் அறிவிப்பு.!
Earthquake | Google (Photo Credit: Pixabay/Wikipedia)

செப்டம்பர் 27, புதுடெல்லி (Technology News): சர்வதேச அளவில் கண்டங்களாகவும், நாடுகளாகவும் மனிதனால் பிரிக்கப்பட்டுள்ள விஷயங்களை தவிர்த்து, நிலத்திற்கடியில் இயற்கை அன்னை வேறொரு பிரிவை வைத்திருக்கிறார். அவற்றை ஆய்வாளர்கள் நிலநடுத்தட்டுகள் (Tectonic Plates), எரிமலை வெடிப்புக்கு (Volcano Eruption) வாய்ப்புள்ள பகுதிகள் என அறிவியல் ரீதியாக கூறுவார்கள். இந்நிலநடுத்தட்டுகள் வாயிலாக அவ்வப்போது ஏற்படும் மிகப்பெரிய நிலநடுக்கம் (Earthquake), பெருத்த சேதத்தை ஏற்படுத்தும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதனைத்தொடர்ந்து உலகளவில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் மொரோக்காவையும் சமீபத்தில் உலுக்கியது.

2023ம் ஆண்டில் (Worldwide 2023 Earthquake List) இன்று வரை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் புள்ளிகளை வைத்து பார்க்கும்போது 7.0-7.9 புள்ளிகளில் 16 முறை வெவ்வேறு அல்லது ஒரே நாடுகள் நிலநடுக்கத்தை சந்தித்துள்ளன. 6.0-6.9 புள்ளிகளில் 87 முறை ஒரே அல்லது வெவ்வேறு நாடுகள் நிலநடுக்கத்தை சந்தித்து இருக்கின்றன. இவற்றில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் 4.0-4.9 புள்ளிகள் நிலநடுக்கம் சர்வதேச அளவில் 7,836 முறை ஏற்பட்டு இருக்கிறது. 8 புள்ளிகளை தாண்டி எங்கும் நிலநடுக்கம் ஏற்படவில்லை.

நிலநடுக்கம் மக்களால் உணரப்படும்போது, அவர்கள் தங்களின் உயிரை கையில் பிடித்து திறந்த வெளிகளில் திரண்டு உயிரை பாதுகாத்துக்கொள்வார்கள். சில நேரங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் நிலநடுக்கம் ஏற்படும்போது, நிலநடுக்கத்தின் அளவை பொறுத்து சேதங்கள் ஏற்படும். துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் கோர அழிவுக்கு, அங்கு உரிய அனுமதி இன்றி அமைக்கப்பட்ட பல வானுயர்ந்த கட்டிடங்கள் காரணம் என நிலநடுக்கத்திற்கு பின்னர் பல்வேறு செய்திகள் வெளியாகின. வானுயர்ந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி உயிர்பலிகள் அதிகரித்த காரணத்தால், 50 ஆயிரத்தை கடந்து பலி எண்ணிக்கை ஏற்பட்டு இருந்தது. Madhya Pradesh Shocker: மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி கற்பழிப்பு: அலட்சியப்படுத்திய பொதுமக்கள்: மத்திய பிரதேசத்தில் நடந்த கொடூரம்.!

இந்நிலையில், கூகுள் நிறுவனம் (Google India) இந்தியாவில் ஆண்ட்ராய்டு (Android) ஸ்மார்ட்போன்கள் (Smartphone) வைத்திருப்போர், நிலநடுக்கத்தை (Earthquake Alert India) அறிந்துகொள்ளும் சேவையை தொடங்கி இருக்கிறது. பயனர் தங்களின் செல்போனில் நிலநடுக்க எச்சரிக்கை அமைப்பை செயல்படுத்தும்போது, நிலநடுக்கம் ஏற்படும் பட்சத்தில் அவை பயனருக்கு தெரிவிக்கப்படும். 4 புள்ளிகள் மற்றும் அதற்கு கீழ் ஏற்படும் நிலநடுக்கத்தின்போது, பயனர் Do Not Disturb முறையை பயன்பாட்டில் வைத்திருந்தால், செல்போன் டிஸ்பிளேயில் எச்சரிக்கை மட்டுமே காண்பிக்கப்படும். ஒலி ஏதும் எழுப்பப்படாது.

அதேவேளையில், 5 மற்றும் 6 புள்ளிகள் அளவில் நிலநடுக்கம் ஏற்படும்போது, பயனர் தனது செல்போனை Do Not Disturb முறையில் வைத்திருந்தாலும், அவரின் செல்போனில் எச்சரிப்பான் செயல்படும். இந்த தரவுகள் ஒன்றுக்கும்மேற்பட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்படும் என்பதால், நிலநடுக்கம் உண்மையில் ஏற்படும் பட்சத்தில், அதற்கான Alert பெற அனுமதி வழங்கியுள்ள செல்போன் பயனருக்கு, உடனடியாக அத்தகவல் பகிரப்படும். இதற்கான தொழில்நுட்பத்தை கூகுள் இந்தியாவுக்குள் செயல்படுத்தி இருக்கிறது. இந்த தரவுகள் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority NDMA) மற்றும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் (National Seismology Center NSC) சார்பில் கண்காணிக்கப்படும்.

ஆண்ட்ராய்டு 5 மற்றும் அதற்கு அதிகம் உள்ள OS பயனர்கள், இச்சசேவையை பெறலாம். இனி உருவாக்கப்படும் ஸ்மார்ட்போன்களில் நிலநடுக்கத்தை கண்காணிக்க சென்சர்களும் பொருத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எந்த இடத்தில் நிலநடுக்கம் ஏற்படுகிறதோ, அந்த இடத்திற்கு அருகில் அல்லது பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் இருக்கும் மக்களுக்கும் உடனடியாக நிலநடுக்கம் தொடர்பான எச்சரிக்கை செய்தி அனுப்பி வைக்கப்படும். இந்த எச்சரிக்கை இந்திய மொழிகளில் மக்களுக்கு சென்றுசேரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செல்போன் நெட்ஒர்க் மற்றும் டேட்டா சேவைகள் இருக்கும் செல்போன்களுக்கு உடனடியாக தகவல் பரிமாறப்படும்.