Akhil Mishra: அமீர்கானின் 3 இடியட்ஸ் படத்தில் நடித்த புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் காலமானார்; சோகத்தில் திரையுலகம்.!
தனது முதல் திரைப்படமான Dhat Tere Ki படத்தில் நாயகியாக நடித்த மஞ்சு மிஷ்ராவை அகில் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

செப்டம்பர் 21, மும்பை (Cinema News): பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் அகில் மிஸ்ரா (வயது 67). இவர் Hazaaron Khwaishein Aisi, Gandhi, My Father உட்பட பல படங்களில் நடித்திருகிறார்.
ஹிந்தி தொலைக்காட்சிகளில் மிகப்பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட Pradhanmantri தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். தற்போது Do Dil Bandhe Ek Dori Se தொடரில் நடித்து வந்தார்.
அமீர்கான், மாதவன் உட்பட பல திரையுலக நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான 3 Idiots திரைப்படம் அகில் மிஸ்ராவுக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. Heart Attack Death Caught Camera: நடனமாடியபடி மயங்கி விழுந்து நொடியில் மரணம்.. விநாயகர் சதுர்த்தி கொணடாட்டத்தில் குடும்பத்தினர் கண்முன் சோகம்.!
தனது முதல் திரைப்படமான Dhat Tere Ki படத்தில் நாயகியாக நடித்த மஞ்சு மிஷ்ராவை அகில் காதலித்து திருமணம் செய்துகொண்டார். மஞ்சு கடந்த 1997ல் இயற்கை எய்தினார்.
அதனைத்தொடர்ந்து, கடந்த 2009 வரை தனிநபராக வாழ்ந்து வந்த அகில் மிஸ்ரா, 2009 பிப்ரவரி மாதம் 03ம் தேதி ஜெர்மனி நடிகை Suzanne Bernert-ஐ திருமணம் செய்துகொண்டார். Vilampalam Benefits: பற்கள் பிரச்சனையில் இருந்து மாதவிடாய் வரை.. விளாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் லிஸ்ட் இதோ.!
தனது மனைவி மீதுகொண்ட பாசத்தால் 2019ல் Manju Ki Juliet என்ற குறும்படத்தையும் எழுதி, இயக்கி, நடித்திருந்தார். இந்நிலையில், அகில் மிஸ்ரா இயற்கை எய்தினார்.
தனது வீட்டில் சமயலறையில் குடும்பத்தினருடன் நின்று பேசிக்கொண்டு இருந்த மிஸ்ரா, மயங்கி விழுந்து பரிதாபமாக பலியானார். அவர் சமீபமாக இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனையை எதிர்கொண்டு வந்தார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)