செப்டம்பர் 21, சத்யசாய் (Andhra Pradesh News): கடந்த செப். 19ம் தேதி விநாயகர் சதுர்த்தி நன்னாள் உலகளவில் இருக்கும் இந்துக்களால் வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்பட்டது. இந்தியாவில் குறிப்பாக வடமாநிலங்களில் பண்டிகை கொண்டாட்டத்துடன் விநாயகர் சதுர்த்தி தினம் மக்களால் சிறப்பிக்கப்பட்டு இருந்தது.
அதனைத்தொடர்ந்து, நேற்று விநாயகரை ஆற்றில் கரைக்கும் நிகழ்வு பல இடங்களில் நடைபெற்றன. பண்டிகைகள் தொடர்ந்து பல இடங்களில் சிறப்பாக நடந்து வந்தன. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பாடலுக்கு நடனமாடிய இளைஞர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஸ்ரீசத்யசாய் மாவட்டம், தர்மவரம் பகுதியை சேர்ந்த இளைஞர் பிரசாந்த் (வயது 26). இவர் தனது வீட்டருகில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலை முன்பு, நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடி கொண்டு இருந்தார். MSD Celebrate Vinayagar Chathurthi: மும்பையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்ந்த தோனி..! வைரல் வீடியோ உள்ளே.!
நண்பருடன் மகிழ்ச்சியாக பிரசாந்த் நடனமாட, உறவினர்கள் அவரை கைதட்டி ஆரவாரப்படுத்தினர். பலரும் அவரின் நடனத்தை உற்சாகமாக கண்டுகளித்த நிலையில், ஒருசமயம் நிலைதடுமாறி பின்னோக்கி சென்று சரிந்து விழுந்த பிரசாந்த் மயங்கினார்.
அவரை மீட்ட குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு மருத்துவர்கள் பிரசாந்த் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். பிரசாந்த் மரணடைவதற்கு முன்பு உற்சாகமாக நடனமாடி மயங்கி விழுந்த வீடியோ அங்கிருந்த உறவினர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
గణేష్ మండపం దగ్గర డాన్స్ చేస్తూ గుండెపోటుతో మృతి
శ్రీ సత్యసాయి జిల్లా - ధర్మవరంలో
ప్రసాద్ (26) అనే యువకుడు బుధవారం రాత్రి గణేష్ మండపం వద్ద డాన్స్ చేస్తూ గుండెపోటుతో ఒక్కసారిగా కుప్పకూలి మృతి చెందాడు. pic.twitter.com/RUqf1mzRMR
— Telugu Scribe (@TeluguScribe) September 21, 2023