Wood Apple Vilampalam (Photo Credit: Amazon)

செப்டம்பர் 20, சென்னை (Health Tips): பழங்கள் நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரவல்லவை. உடலுக்கு தேவையான ஒவ்வொரு சத்துக்களும் அதில் நிறைந்துள்ளதால், தினம் ஏதேனும் ஒரு பழம் (Fruits) சாப்பிடுவோருக்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாது. ஒவ்வொரு நாளும் நமது உடலை பாதுகாக்க அவற்றில் இருக்கும் சத்துக்கள் உதவி செய்யும்.

மருத்துவர்களே உடல்நலக்குறைவை நிவர்த்தி செய்ய ஊசி, மாத்திரைகளை எழுதி கொடுத்தாலும் சத்துள்ள காய்கறிகள், பழங்களை எடுத்துக்கொள்ளவே அதிகம் பரிந்துரை செய்வார்கள். அவ்வுளவு நன்மைகள் பழங்களில் நிறைந்து கிடக்கின்றன.

பழங்களில் பலவகைகள் இருக்கின்றன. இன்று விளாம்பழம் (Vilampalam) சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்ளலாம். விளாம்பழம் (Wood Apple) பல கோவில்களில் இருக்கும் மரங்களில் முதன்மையானது என்றும் கூறலாம். iPhone 15 Pro: இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ விற்பனை தேதி அறிவிப்பு; ஆப்பிள் பிரியர்களே தயாராகுங்க.! 

விளாம்பழம் பற்களை (Wood Apple Benefits) வலுப்படுத்தும். உடல் செரிமான சக்தி அதிகரிக்கப்படும். தலைவலி பிரச்சனை குறையும். கண்பார்வை மங்கல் பிரச்சனை இருந்தால் சரியாகும். பசியினை தூண்டும். இதயத்திற்கு தேவையான பலத்தினை வழங்கும்.

பலருக்கும் ஏற்படும் மூட்டு வலி, உடல் வலியை சரி செய்யும். இதயத்துடிப்பினை சீராக்க உதவி செய்யும். வாயுத்தொல்லையை சரி செய்யும். நரம்புத்தளர்ச்சி குணமாகும். எலும்புகள் வலுப்படுத்தப்படும். இரத்தத்தினை சுத்திகரிக்கும். நினைவாற்றல் அதிகரிக்கப்படும்.

பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் இரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரிசெய்யும். உடல், தசை வளர்ச்சிக்கு உகந்தது. வாய்ப்புண், குடல் அல்சர் போன்ற பிரச்சனைகள் சரியாகும். வறட்டு இருமல், வாய் கசப்பு சரியாகும்.

தமிழ்நாட்டில் விளாம்பழம் ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் வரையிலும் தடையின்றி கிடைக்கும். சீசனில் விளாம்பழத்தை வாங்கி சாப்பிட்டால் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்கும்.