Singer Bhuvana Seshan on Vairamuthu: மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது வைரமுத்துவின் விவகாரம்.. சின்மயிக்கு ஆதராக களமிறங்கிய தமிழ் பாடகி.!
பாடகிகளாக திரையுலகில் ஜொலிக்க நினைக்கும் பல இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததாக வைரமுத்துவின் மீது குற்றசாட்டு எழுந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், மீண்டும் அவை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஜூன் 10, சென்னை (Cinema News): திரையுலகில் நடிக்க வாய்ப்பு தேடிவரும் இளம்பெண்கள் (Cine Industry), பாடகியாக முயற்சித்து வாய்ப்பு தேடும் இளம்பெண்களை தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உட்பட திரையுலகை சேர்ந்தோர் படுக்கைக்கு பெண்களை அழைக்கும் கேடுகெட்ட சூழ்நிலை இருந்து வருவதாக பல கட்டக்கட்டங்களில் புகார்கள் எழுந்து இருக்கின்றன.
கடந்த 2018ம் ஆண்டு சின்மயி (Chinmayi Sripaada) தமிழ் திரையுலகில் முக்கிய பாடகராக இருந்து வந்த வைரமுத்துவின் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்தார். அவர் உட்பட 17 இளம்பெண்களாகிய பாடகிகளும் அடுத்தடுத்து தங்களுக்கு நடந்த விபரத்தை தெரிவித்து இந்திய திரைஉலகையே அதிரவைத்தனர். அந்த சமயத்தில் திரையுலகில் நடக்கும் பாலியல் பிரச்சனைகளை #Metoo மூலமாக பலரும் அம்பலப்படுத்தி இருந்தனர்.
இந்த நிலையில், பாடகி புவனா சேஷனும் (Singer Bhuvana Seshan) வைரமுத்துவுக்கு எதிராக தனது பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்து மீண்டும் தமிழ் திரையுலகை பரபரப்பாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அவர் சின்மயியின் முயற்சிகளையும் பாராட்டி பேசியுள்ளார். Proposal for Shubman Gill: வேறலெவல் ப்ரபோசல்! ஓவல் மைதானத்தில் ஷுப்னம் ஹில்லுக்கு காதல் ப்ரபோஸ் செய்த பெண்மணி..!
இதுகுறித்து அவர் பேசுகையில், "பல வக்கிர எண்ணம் கொண்டவர்கள் நோக்கம், இளம் பாடகர்களின் கனவுகளை தடுப்பதே. கவிஞர் வைரமுத்துவின் மீது 17 பேர் குற்றசாட்டுகளை முன்வைத்தாலும், இவர்களில் 4 பேர் மட்டுமே தங்களின் முகத்தை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் ஆவார்கள். இளம் பாடகர்களின் கனவுகள் நசுக்கப்படுவதை நான் விரும்பவில்லை.
வைரமுத்துவுக்கு எதிராக பல பெண்கள் தங்களின் குற்றசாட்டை முன்வைத்தாலும், இன்று வரை அவரை யாராலும் எதிர்க்க முடியவில்லை. சின்மயி மட்டும் அந்த விஷயத்தில் தெளிவுபட நின்று, தனி ஆளாக போராடுகிறார். அவரின் முயற்சி என்னை வியக்க வைக்கிறது. இன்று வரை அவர் சமூக வலைத்தளத்தில் வைரமுத்துவுக்கு எதிராக பேசுவதால் பல கமெண்டுகளை பெறுகிறார்.
இவ்வாறான விஷயங்களால் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள். ஆனால், இன்று வரை விசாரணை என்பது இல்லை. திரைத்துறைக்குள் இருக்கும் இவ்வாறான விஷயங்கள் களையப்பட வேண்டியவை. 7 பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பிரிஜ் பூஷனுக்கும், வைரமுத்துவுக்கு ஒரே மாதிரியான விதிகள் என்பது இருக்க வேண்டும்.