Kamal Hassan on Indian 2: ஷங்கரின் படைப்பிலேயே இதுதான் உச்சக்கட்டம்; இந்தியன் 2 படம்பார்த்து வியந்துபோன கமல்ஹாசன் பாராட்டு.!
இந்தியன் 2 திரைப்படம் ஒருகட்டத்தில் கைவிடப்படப்போவதாகவும் பேச்சுக்கள் எழுந்து, விபத்தில் பலியான நபர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு கொடுக்கப்பட்டு படம் திரைக்கு வருகிறது.
ஜூன் 28, சென்னை (Cinema News): பிரம்மாண்டங்களின் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல் ஹாசன், நடிகர்கள் பிரியா பவானி சங்கர், ரகுல் பிரீத்தி சிங், நெடுமுடி வேணு, நயன்தாரா, காஜல் அகர்வால், சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, எஸ்.ஜே சூர்யா, பாபி சிம்ஹா, யோகி பாபு, மாரிமுத்து, சதீஷ், ஆடுகளம் நரேன், ஜெயப்ரகாஷ் உட்பட பலர் நடித்து உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2.
லைகா ப்ரொடெக்சன்ஸ் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஏ.ஆர் ரஹ்மான் & அனிரூத் இசையில், ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து 2வது பாகம் படமாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு, 2017ம் ஆண்டு என பலகட்டமாக தயாரிப்பு பணிகளுக்கு பேச்சுவார்த்தை நடந்து, இறுதியாக 2017ம் ஆண்டு லைகா நிறுவனம் இந்தியன் திரைப்படத்தை எடுக்க முடிவெடுத்து ஒப்பந்தமிட்டது. சுமார் 24 ஆண்டுகளுக்கு பின்னர் ஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் கமல் ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார்.
பிப்ரவரி 2020ல் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற விபத்து காரணமாக இந்தியன் 2 திரைப்படம் ஒருகட்டத்தில் கைவிடப்படப்போவதாகவும் பேச்சுக்கள் எழுந்து, விபத்தில் பலியான நபர்களின் குடும்பத்திற்கு இலட்சத்தில் இழப்பீடு கொடுக்கப்பட்டது. பின் கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட தடவினால் படப்பிடிப்புகள் தாமதமாகி, படம் வெளியீடுக்கு தயாராக இருக்கிறது.
விரைவில் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இன்று இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்த நடிகர் கமல் ஹாசன், அதனை பாராட்டி ட்விட் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், "இந்தியன் 2 படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் சங்கர் அவர்களுக்கு..
இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி. அன்பன் கமல்ஹாசன்" என்று கூறியுள்ளார்.