Surya 44: வாயில் சிகிரெட்டுடன் கெத்தாக லுக் விட்ட சூர்யா; சூர்யா 44 படத்தின் அசத்தல் அப்டேட் இதோ.!
சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
ஜூலை 23, சென்னை (Cinema News): தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவரும் சூர்யா (Surya), தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜூடன் இணைந்து லவ் லாகர் வார் (Love Laughter War) என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் பூஜா ஹெட்ஜ், ஜெயராம், கருணாகரன், சுஜிதா சங்கர், ராமச்சந்திரன், துரைராஜ் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். படத்தின் இசையமைப்பு பணிகளை சந்தோஷ் நாராயணனும், ஒளிப்பதிவு பணிகளை ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவும், எடிட்டிங் பணிகளை சைஃபிக் முகமது அலியும் மேற்கொண்டுள்ளனர். கடந்த மார்ச் 2023 ஆம் ஆண்டு இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டு, தற்போது படப்பிடிப்பு மற்றும் பிற பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்ற வருகிறது. Vidaamuyarchi Update: ஒருவழியாக அஜர்பைஜான் ஷெட்யூலை முடித்த விடாமுயற்சி டீம்.. உச்சகட்ட குஷியில் இருக்கும் தல ரசிகர்கள்..!
சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரத்தியேக வீடியோ:
இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனமும், 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்து வழங்குகிறது. சூர்யாவின் 44வது திரைப்படமான இப்படம், கார்த்திக் சுப்புராஜின் கைவண்ணத்தில் பல அதிரடி திருப்புமுனை கொண்ட காட்சிகளுடன் தயாராகி வருகிறது. இந்நிலையில், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு பிரத்தியேகமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ உங்களின் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது. இன்று நடிகர் சூர்யாவுக்கு 49 வயது ஆகிறது. இதனை முன்னிட்டு சூர்யா 44 படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில், நடிகர் சூர்யா மாஸான தோற்றத்தில் வாயில் சிகிரெட்டுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார்.