Vijay Antony Vs Bule Sattai Maran: ட்விட்டரில் அடித்துக்கொள்ளும் நடிகர் விஜய் ஆண்டனி Vs திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன்.. ரோமியோ படத்தால் வந்த சர்ச்சை.!

ரோமியோ படம் வெளியான பின்பு வறுத்தெடுக்கும் விமர்சனங்களால் விஜய் ஆண்டனி தரப்பு, திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறனுக்கு எதிராக நேரடியாக கண்டன அறிக்கை வெளியிட்டது. இது தற்போது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இருதரப்பு மோதலை ஏற்படுத்தியுள்ளது.

Vijay Antony | Blue Sattai Maran (Photo Credit: Wikipedia / @TamilTalkies X)

ஏப்ரல் 21, சென்னை (Cinema News): விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி (Vijay Antony) பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், பரத் தனசேகர் மற்றும் ரவி ஆகியோரின் அட்டகாசமான இசையில், கடந்த 11 ஏப்ரல் 2024 அன்று வெளியான திரைப்படம் ரோமியோ (Romeo). இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, விடிவி கணேஷ், யோகி பாபு, இளவரசு, தலைவாசல் விஜய் உட்பட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் காட்சிகள் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்றது.

புளூ சட்டை (Blue Sattai Maran) மாறனின் விமர்சனத்தால் சண்டை: இந்த நிலையில், படம் வெளியான பின்பு கலமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தை பார்த்த திரைப்பட விமர்சகர் புளூ சட்டை மாறன் என்பவர், படம் குறித்து தனது விமர்சனங்களையும் முன் வைத்திருந்தார். இது விஜய் ஆண்டனி தரப்பில் கடும் கண்டனத்தை ஏற்படுத்த, அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், நேரடியாக ப்ளூ சட்டை மாறனின் (Tamiltalkies) செயலை கண்டித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதனையடுத்து, இந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ள புளூ சட்டை மாறன், விஜய் ஆண்டனியின் பாணியில் பதில்களை சொல்லி படத்தை பலரும் ஆதரிங்கள் என்று கலாய்ப்பது போல தனது செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். Beetroot Puri: பீட்ரூட் பூரி செய்வது எப்படி..? விவரம் உள்ளே..! 

அன்பே சிவம் ஆகிடாதீங்க: விஜய் ஆண்டனி தனது கண்டனக்குறிப்பில், திரையில் கொண்டாடப்படாமல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டதற்கு பின் கொண்டாடப்பட்ட கமல்ஹாசனின் அன்பே சிவம் (Anbe Sivam) திரைப்படம் போல, தனது ரோமியோ படத்தையும் ஆக்கிவிட வேண்டாம் என்ற கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில், அதனை குறிப்பிட்டு மாறன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக ப்ளூ சட்டை வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "ரத்தம், கொலை, ரோமியோ என ஹாட்ரிக் பிளாப் தந்து ரசிகர்களை ஏமாற்றியதற்கு நாங்கள் தான் அனுதாபம் தெரிவிக்க வேண்டும். விஜய் ஆண்டனி என்ன காமெடி செய்கிறார்?.

விஷக்கிருமியாக சுயவிமர்சனம் செய்த விமர்சகர்: அடுத்தடுத்த மூன்று படங்கள் தோல்வியற்ற காரணத்தால், விஜய் ஆண்டனி ரோமியோ படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக்க வேண்டும் என்று முதலிரவில் மனைவி மதுபானம் குடிப்பது போல போஸ்டர் வைத்து வித்தியாசமான விளம்பரம் செய்தும் மக்கள் அதனை கண்டு கொள்ளவில்லை. தற்போது விமர்சனங்களை செய்தோர் மீது குறிவைத்து, இவர் வம்பு இழுத்து வருகிறார். தரம் தாழ்ந்த விமர்சகர், விமர்சன விசக்கிருமி ப்ளூ சட்டை (Famous Tamil Movie Reviewer) வெளியிட்டுள்ள ரோமியோவின் விமர்சனத்தை புறக்கணித்து, அலை கடல் என திரண்டு ரோமியோ படத்தை திரையரங்கில் சென்று அரங்கம் நிறைந்து கண்டு களியுங்கள்" எனக் கூறியுள்ளார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement