ஏப்ரல் 20, சென்னை (Kitchen Tips): குழந்தைகளுக்கு உணவில் சத்து நிறைந்த காய்கறிகளை சேர்க்க வேண்டும். அதில் முக்கியமான ஒன்றாக பீட்ரூட்டை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், பீட்ரூட் பூரி செய்து கொடுப்பதினால், குழந்தைகள் அதனை விரும்பி உண்பர். அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 4 கப்
பீட்ரூட் துருவல் - 4 கப்
பச்சை பட்டாணி - 3 மேசைக்கரண்டி
சீரகம் - 3 தேக்கரண்டி
ஓமம், மிளகுத்தூள் - தலா 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. Family Suicide: குடும்ப தகராறு; 3 குழந்தைகளுடன் பெண் குளத்தில் குதித்து தற்கொலை..!
செய்முறை:
முதலில் பச்சை பட்டாணியை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், கொத்தமல்லித்தழையை பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பிறகு, ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சீரகம், ஓமம், பீட்ரூட் துருவல், மிளகுத்தூள், இஞ்சி-பூண்டு விழுது, நறுக்கி வைத்த கொத்தமல்லித்தழை மற்றும் அரைத்த பச்சை பட்டாணி ஆகியவற்றோடு தேவையான அளவு உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், அவற்றை பூரிகளாக தேய்த்து வைத்துக்கொள்ளவும். இறுதியாக, அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் தேய்த்து வைத்த பூரியை போட்டு பொரித்து எடுத்துக்கொள்ளவும். அவ்வளவுதான் சத்து நிறைந்த பீட்ரூட் பூரி தயார்.