Smoke Shortflix Movie: இளவயதில் அவள் சந்தித்த கொடுமைகள்.. படமாகிறது பிரபல தமிழ் நடிகையின் வாழ்க்கை.. அசத்தல் விபரம் இதோ.!
குசேலன், மிருகம் உட்பட பல படங்களில் நடித்து வரவேற்பு பெற்ற நடிகை சோனாவின் 14 வயதில் நடந்த விசயங்களை படமாக்க திட்டமிட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிப்ரவரி 25, சென்னை (Cinema News): தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான படங்களில் நடித்து வரவேற்பு பெற்ற நடிகை சோனா ஹெய்தீன் (Sona Heiden). இவர் தமிழில் 2001ம் ஆண்டு வெளியான பூவெல்லாம் உன்வாசம் திரைப்படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதனைத்தொடர்ந்து ஷாஜகான், மிருகம், குசேலன், குரு என் ஆலு, அழகர் மலை, கோ, யாமிருக்க பயம் ஏன், ஜித்தன் 2, ஓடு ராஜா ஓடு, ஸ்ரீ சபரி ஐயப்பன் உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். UP Shocker: மாயமான 6 வயது சிறுமி 40 நாட்கள் கடந்து சடலமாக மீட்பு; கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த அவலம்.!
தயாரிப்பாளராக கனிமொழி படம்: நடிகையாக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள நடிகை சோனா, கடந்த 2010ல் ஸ்ரீபதி ரங்கசாமியின் இயக்கத்தில், ஜெய், விஜய் வசந்த் உட்பட பலர் நடித்து வெளியான கனிமொழி படத்தையும் தயாரித்து வழங்கி இருக்கிறார். தொடர்ந்து சின்னத்திரையிலும் தோன்றி வருகிறார். கடந்த 2001ல் இருந்து தற்போது வரை தொடர்ந்து இவர் திரையுலகில் பயணித்து வருகிறார். Trending Video: கார் கண்ணாடியில் குளிர்பானத்தை ஊற்றிய இளைஞர்; நொடியில் நடந்த மாற்றம்.. அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
ஷார்ட்ப்ளிக்ஸ் வெளியீடு: இந்நிலையில், சோனாவின் வளரிளம் பருவம் என்பது மிகுந்த கொடுமைகள் நிறைந்ததாக இருந்தது. அவற்றை எதிர்த்து போராடி எப்படி சந்தித்தேன், அந்த தருணத்தில் தான் அனுபவித்த பிரச்சனைகள் என பலவற்றையும் தற்போது தொகுத்து அவர் படமாக எடுக்க இருக்கிறார். இப்படம் ஷார்ட்ப்ளிக்ஸ் (Shortflix) எனப்படும் ஓடிடி தலத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்குவது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்திற்கு ஸ்மோக் (Smoke) என பெயரிடப்பட்டுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)