Bigg Boss Double Eviction: பிக் பாஸ் 9-ல் அதிரடி ட்விஸ்ட்.. இந்த வாரம் எவிக்சனில் சம்பவம்.. யாரென்று தெரியுமா?
Bigg Boss 9 Tamil Double Eviction: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இல் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் நுழைந்ததில் இருந்து அசத்தி வருகின்றனர். பார்வையாளர்களுக்கு ட்விஸ்ட் வைக்கும் விதமாக இந்த வாரம் டபுள் எவிக்ஷன் (Bigg Boss Elimination Today) நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 08, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9)ல், இதுவரை 30 நாட்கள் கடந்துள்ளன. பிக்பாஸ் இல்லத்திலிருந்து இதுவரை பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன் ஆகியோர் எவிக்சன் (Bigg Boss Tamil Eviction) முறையில் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர். நந்தினி தனக்கு போட்டியின் தன்மை மிகப்பெரிய மன உளைச்சலை தருவதாக வெளியேறி இருந்தார். நந்தினி தனக்கு போட்டியின் தன்மை மன உளைச்சலை தருவதாக தானாக முன்வந்து வெளியேறினார். பிக் பாஸை பொறுத்தவரையில் போட்டியாளர்கள் ஸ்ட்ராட்டஜி உபயோகித்து எப்போதும் டாஸ்க் மற்றும் பிக் பாஸ் டைட்டிலை எப்படி ஜெயிப்பது? என்று கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால் 9-வது சீசனை பொறுத்தவரையில் சிலர் மட்டுமே போட்டியில் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துகின்றனர். மற்ற போட்டியாளர்கள் எதற்காக உள்ளே சென்றனரோ அதையே மறந்து ஒன்றும் புரியாதது போல இருக்கின்றனர். அப்படி இருந்ததால் தான் இதுவரை 4 பேர் வெளியேறினர். Bomb Threat: நடிகர் அருண் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. திரை பிரபலங்களை டார்கெட் செய்யும் மர்ம கும்பல்.!
சுவாரஸ்யமில்லாத பிக் பாஸ் 9 (Bigg Boss Tamil Season 9):
பிக் பாஸ் 9 சீசன் தமிழ் நிகழ்ச்சியில் எல்லை மீறிய பேச்சுகளும், எல்லை மீறிய செயல்களும் தொடர்ந்து வந்ததால் பெரும்பாலான மக்கள் அதனை பார்ப்பதையும் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக திவாகர் தகுதி, தராதாரம் என்ற வார்த்தையை அதிகமாக உபயோகித்து பேசியதால், டென்ஷனான விஜய் சேதுபதி கடந்த வாரம் தகுதி, தராதாரம் குறித்து பேச நீங்கள் யார் சார்? என்றும் அவரிடம் கேட்டிருந்தார். மேலும் பெண்களின் பாதுகாப்பின்மையை உறுதி செய்யும் பொருட்டு கம்ருதீன், வினோத் திவாகர் ஆகியோர் நடந்து கொண்டதாகவும் இணையத்தில் வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் பிக் பாஸ் 9 சீசனில் உள்ளே சென்ற போட்டியாளர்கள் தகுதியற்றவர்களாக கருதப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களும் பிக் பாஸ் பார்ப்பதை தவிர்க்க தொடங்கியதால், அதனை சமாளிக்க வைல்ட் கார்டு போட்டியாளர்களை இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் விஜய் டிவி அனுப்பியது. அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்குள் அமித் பார்கவ் (Bigg Boss Amit Bhargav), திவ்யா கணேஷ் (Bigg Boss Divya Ganesh), பிரஜின் பத்மநாதன் (Bigg Boss Prajin Padmanabhan), சாண்ட்ரா ஏமி (Bigg Boss Sandra Amy) ஆகியோர் சென்றனர்.
பிக் பாஸ் 9 டபுள் விக்ஷன் (Double Eviction):
கடந்த வாரம் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற நிலையில், ஆஹா ஓஹோ ஹோட்டல் டாஸ்க்கும் நடந்தது. இந்த டாஸ்க்கில் சாண்ட்ராவுக்கு பிக் பாஸ் சீக்ரெட் டாஸ்க் கொடுத்து இருந்தார். அதன்படி மேனேஜரை ரிசைன் செய்ய வைக்க வேண்டும் என தெரிவித்திருந்த நிலையில், சாண்ட்ரா செய்த அலப்பறையால் மேனேஜர் பதவியில் இருந்து விக்கல்ஸ் விக்ரம் தானாக முன்வந்து ரிசைன் செய்தார். ஹோட்டலுக்கு கெஸ்ட்டாக வந்த தீபக், மஞ்சரி, பிரியங்கா மூவரும் ஏமாற்றத்துடன் வெளியேறினர். இதில் தீபக் கண் கலங்கி இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் எங்களுக்கென நிறைய மெமரிஸ் உள்ளது. ஆனால் இந்த சீசனில் அப்படி எதுவும் இருக்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன் எனக் கூறியிருந்தார். இதனால் பிக் பாஸ் மூவரிடமும் மன்னிப்பும் கோரி இருந்தார். ஆஹா ஓஹோ ஹோட்டல் சீக்ரெட் டாஸ்க்கில் சிறப்பாக பங்காற்றியதற்காக விஜய் சேதுபதி சாண்ட்ராவை பாராட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வைல்ட் கார்டு போட்டியாளர்கள் உள்ளே வந்ததில் இருந்து பிராங்க் டாஸ்க், சீக்ரெட் டாஸ்க் என அற்புதமாக அசத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போவது யார்? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்த நிலையில், பார்வையாளர்களுக்கு ட்விஸ்ட் வைக்கும் விதமாக இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது அதன்படி துஷார் (Bigg Boss Tushaar) மற்றும் பிரவீன் ராஜ் (Bigg Boss Praveen Raj) பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிக் பாஸ் 9 தமிழ் 2-வது ப்ரோமோ:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)