Jolly Bastian Passes Away: பிரபல நடிகர் ஜாலி பாஸ்டியன் மரணம்... ரசிகர்கள் இரங்கல்..!

பிரபல நடிகர் ஜாலி பாஸ்டியன் மாரடைப்பால் காலமானார்.

Jolly Bastian (Photo Credit: @saraswathi1717 X)

டிசம்பர் 27, சென்னை (Chennai): பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகருமான ஜாலி பாஸ்டியன் (வயது 57) மாரடைப்பால் இன்று காலமானார். இவரது திடீர் மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவரது மறைவிற்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ISPL 2024: இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக்... சென்னை அணியை வாங்கிய சூர்யா..!

ஜாலி பாஸ்டியன் (Jolly Bastian) அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 900 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். இவர் “லாக் டவுன் டைரி” படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். இவர் சூப்பர் ஸ்டார்களான ரஜினி, சிரஞ்சீவி, மோகன்லால், மம்மூட்டி, சிவராஜ் குமார் உள்ளிட்டோருடனும் பணியாற்றியுள்ளார். இவர் பல முன்னணி நடிகர்களின் சண்டைக்காட்சிகளுக்கு டூப் ஹீரோவாக நடித்துள்ளார்.