Film director Biju Vattappara Dies: பிரபல திரைப்பட இயக்குநர் பிஜு வட்டப்பாரா மறைவு.. திரைத்துறையினர் இரங்கல்..!

பிரபல திரைப்பட இயக்குநரும், பல தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் ஆவணப்படங்களின் திரைக்கதை எழுத்தாளருமான பிஜு வட்டப்பாரா உயிரிழந்தார்.

Film director Biju Vattappara (Photo Credit: Wikipedia)

மே 14, சென்னை (Cinema News): மலையாள திரையுலகில் பல சிறந்த படங்களை கொடுத்த பிரபல திரைப்பட இயக்குநர் தான் பிஜு வட்டப்பாரா (Film director Biju Vattappara). இவருக்கு வயது 54. 'ஸ்வந்தம் காரியம் ஜிந்தாபாத்', 'ராமராவணன்', 'நோ ஸ்மோக்கிங்', மற்றும் 'மை டியர் மம்மி' போன்ற படங்களின் மூலம் இவர் பிரபலமானார். 2007 இல் 'ஸ்வந்தம் காரியம் ஜிந்தாபாத்' படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் பெற்றார். சக்கர வாவா, வெல்ல கத்ரீனா போன்ற தொடர்களின் திரைக்கதை ஆசிரியராக இருந்தார். England Players in IPL 2024: "போயிட்டு வரோம் பா.." என உலகக்கோப்பை போட்டிக்கு கிளம்பிய இங்கிலாந்து வீரர்கள்.. சோகத்தில் ஐபிஎல் அணிகள்..!

மேலும் கேரள கிரந்தசாலா சங்கத்தின் மாநில கவுன்சில் உறுப்பினராகவும், அகில கேரள பாலஜனசக்யாவின் மத்திய மண்டல செயலாளராகவும் இருந்தார். இந்நிலையில் இவர் சொந்த தேவைக்காக மூவாட்டுபுழாவுக்கு வந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.