England Players (Photo Credit: @ESPNcricinfo X)

மே 14, மும்பை (Cricket News): மொத்தம் 70 லீக் போட்டிகளுக்கு அட்டவணை படுத்தப்பட்டு மிகவும் பிரமாண்ட மற்றும் மிக நீண்ட டி20 லீக் கிரிக்கெட் தொடராக ஐபிஎல் 2024 (IPL 2024) நடைபெற்று வருகின்றது. இதுவரை 63 லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கொல்கத்தா அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. அதேபோல் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பினை இழந்துள்ளது. எனவே அடுத்த மூன்று இடத்திற்காக மற்ற அணிகள் கடுமையாக போராடி வருகின்றது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வீரர்கள் இந்த வார இறுதியில் இங்கிலாந்திற்கு திரும்பவுள்ளனர்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (ICC Men's T20 World Cup 2024) வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிகளுக்கான விளம்பர தூதராக பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசைன் போல்ட், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படுபவர். இந்த உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதுகின்றன. தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன. UN Aid Worker Killed in Firing in Gaza: காசாவில் நடந்த துப்பாக்கிச்சூடு.. சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஐநா பாதுகாப்புத் துறையின் ஊழியர்..!

இங்கிலாந்து அணி: இதன்காரணமாக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி, இத்தொடருக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலகி தயாகம் திரும்பி வருகின்றனர்.

அதன் அடிப்படையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் மொயின் அலி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடும் ஜாஸ் பட்லர், பெங்களூரு அணியில் விளையாடும் வில் ஜாக்ஸ், ரீசோ டாப்லி, பஞ்சாப் அணியில் விளையாடும் சாம் கரன், பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டன் மற்றும் கொல்கத்தா அணியில் விளையாடும் பிலிப் சால்ட் ஆகியோரும் இங்கிலாந்துக்கு திரும்பவுள்ளனர். ஐபிஎல் அணிகளுக்கு இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.