செப்டம்பர் 19, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் (Robo Shankar) நேற்று (செப்டம்பர் 18) இரவு காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் ஸ்டாண்டப் காமெடியனாக அறிமுகமாகி, பின்னாளில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக கவனிக்கப்பட்டார். Robo Shankar Death: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மரணம்.. கண்ணீரில் திரையுலகம்.! காரணம் என்ன? அவரே சொன்ன உண்மை.!
ரோபோ சங்கர் நடித்த படங்கள் (Robo Shankar Movies List):
கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான ரௌத்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். பின்னர், 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் நல்ல கவனத்தை பெற்றார். தொடர்ந்து, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைக்காரன், விஸ்வாசம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக அடையாளம் பெற்றார். குறிப்பாக, 'அன்னைக்கு காலைல 6 மணிக்கு இருக்கும்' என்ற நகைச்சுவை மூலம் இவரின் தனிப்பட்ட நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், ரோபோ சங்கரின் (வயது 46) மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். மேலும், பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்:
திரைக்கலைஞர் ரோபோ சங்கர் அவர்கள் மறைவெய்திய செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல்:
திரைக்கலைஞர் சகோதரர் ரோபோ சங்கர் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றோம்.
அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த ரோபோ சங்கர் அவர்களின் திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
மேடைக் கலைஞராக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி - சின்னத்திரையில் சாதித்து -… pic.twitter.com/gip3hHPvQd
— Udhay (@Udhaystalin) September 18, 2025
கமல்ஹாசன் இரங்கல்:
ரோபோ சங்கர் ரோபோ புனைப்பெயர் தான். என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி. போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே.
ரோபோ சங்கர்
ரோபோ புனைப்பெயர் தான்
என் அகராதியில் நீ மனிதன்
ஆதலால் என் தம்பி
போதலால் மட்டும் எனை விட்டு
நீங்கி விடுவாயா நீ?
உன் வேலை நீ போனாய்
என் வேலை தங்கிவிட்டேன்.
நாளையை எமக்கென நீ விட்டுச்
சென்றதால்
நாளை நமதே.
— Kamal Haasan (@ikamalhaasan) September 18, 2025
யோகிபாபு இரங்கல்:
ஆருயிர் நண்பர், நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் திடீர் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆருயிர் நண்பர் ,நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் திடீர் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.#RoboShankar #RIP 🙏 pic.twitter.com/aCbPI8r79L
— Yogi Babu (@iYogiBabu) September 18, 2025
சிலம்பரசன் இரங்கல்:
நடிகர் ரோபோ சங்கர் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு. என்றும் நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே இருக்கும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள்.
நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு. என்றும் நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே… pic.twitter.com/TSL7bKlaZF
— Silambarasan TR (@SilambarasanTR_) September 18, 2025